background img

புதிய வரவு

சீனாவில் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை:17 பேர் பலி; 118 பேர் காயம்

தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் போஸ் கான் நகரம் உள்ளது. இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். நேற்று இங்கு கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போஸ்கான் நகரம் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷூ, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

அதே நேரத்தில் பேய்மழை பெய்ததால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று வீசிய சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியாகினர். 118 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மழையால் 506.7 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் ரூ.35 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts