background img

புதிய வரவு

வளையல் மாலை போட்டால் கெட்டிமேளம் தான்

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழ கபிஸ்தலம் என்ற திருத்தலம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை.

மகாமண்டபத்தின் வலதுபுறம் காமாட்சி அம்பிகையின் சன்னதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள் உள்ளன. திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த இறைவியிடம் முறையிடுகின்றனர்.

அதற்கு பரிகாரமாக கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வழிபடுகின்றனர். இவ்வாறு பக்தர்களால் அம்பிகைக்கு அணிவிக்கப்படும் மாலையில் உள்ள வளையல்களை திருமணம் ஆகாத பிற கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

அவ்வாறு வளையலை பெறும் பெண்களுக்கு, 90 நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலில் நடைபெறும் பிரதோஷத்தில் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts