background img

புதிய வரவு

கமுதியில் ஒரு காதல்... முக்கிய வேடத்தில் ராதிகா!!

அடுத்து ஒரு மதுரைப் பக்கத்துக்கு காதல் வருகிறது... ரசிகர்களே தயாராகுங்கள். படத்துக்குப் பெயர் கமுதியில் ஒரு காதல்.

மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களைத் தந்தவர் சூரியபிரகாஷ். இவர்தான் இந்த கமுதி காதலுக்கு கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இதுகுறித்து சூர்ய பிரகாஷ் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் நாட்டார்பட்டியில் வாழ்ந்த காதலர்களின் கதை இது. நெஞ்சை நெகிழ வைக்கும் இரு காதல் ஜோடிகளின் வாழ்க்கையை அப்படியே திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். இதற்காக அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நடிகர்கள் தேர்வு நடக்கிறது.

படத்தில் முக்கியத்துவம் கொண்ட அம்மா வேடத்தில் ராதிகா நடிக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த அம்மா கேரக்டர் புதுமையானதாக இருக்கும்.

ஏற்கெனவே சரத்குமாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கியுள்ளேன். சரத்குமாரின் மாயி பாத்திரம் போல் இந்தப் படத்தில் வரும் ராதிகாவின் பாத்திரமும் பேசப்படும்.

விக்ரம் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்கிறேன். கோவை, புதுக்கோட்டை, கமுதி, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது'' என்றார் சூரியபிரகாஷ்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts