background img

புதிய வரவு

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: 2 பேர் பலி; 100 பேர் காயம்

கடந்த மாதம் 11-ந் தேதி ஜப்பானின் வடகிழக்கு கடலோரத்தில் உள்ள மியாகிபகுதியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதையடுத்து அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடலில் 3 அடி உயரத்துக்கு மேலாக அலைகள் எழும்பின. இதனால் இரவு 11.32 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அதிகாலை 1 மணியளவில் அது வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, மியாமியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. மியாகி, யமகாடா, அவோமோரி, வ்வட், அகிதா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தின் போது மியாகியில் புல்லட்ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஜபாரகி பகுதியில் உள்ள அணுமின்நிலையங்கள் பாதிக்கப்பட்டவில்லை. எனவே அவை வழக்கம் போல் இயங்கின. அதே வேளையில் மியாகியில் உள்ள அங்காவா அனுமின் நிலையத்தில் உள்ள 5 அணுஉலைகளில் உலைகள் செயல் இழந்தன. எனவே அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அகிடா, அலோமோதியில் உள்ள அனல்மின் நிலையங்களிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாதிக்கப்பட்ட புருஷிமா அணு மின்நிலையத்தில் குளிர் விக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts