background img

புதிய வரவு

சாய்பாபாவுக்கு ஆசிரமத்தில் அவசர சிகிச்சை பிரிவு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருபவர் சத்யசாய்பாபா (85). இவர் கடந்த மாதம் 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள சத்ய சாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இன்று 20-வது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூச்சுத்திணறல் இருப்பதால் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. மருந்துகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்வதால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா கூறும்போது, சாய்பாபாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அவரது சுவாச கோளாறை போக்குவதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். இந்த கோளாறு குணமானால் செயற்கை சுவாச கருவியை அகற்றி விடலாம் என்றார்.

இந்த நிலையில் சத்ய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, சாய்பாபாவை 2 வாரத்திற்குள் ஆசிரமத்திற்கு கொண்டு வருவோம். அவருக்கு அங்கேயே அவசர சிகிச்சை பிரிவு ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

ஆஸ்பத்திரியில் சாய்பாபா இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாபாவை ஆசிரமத்துக்கு கொண்டு வந்த சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

சாய்பாபா விரைவில் நலம் பெற வேண்டி புட்டபர்த்தி ஆசிரமத்தில் தொடர் பஜனைகள் நடக்கிறது. ஆந்திரா முழுவதிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு யாகங்கள் நடக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts