background img

புதிய வரவு

சோனியா - ஜி.கே.வாசன் சந்திப்பு தமிழக காங். பிரச்சனை குறித்து ஆலோசனை

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை, சட்டசபை தேர்தலுக்கு முன்பே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, கோஷ்டித் தலைவர்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்தனர்.


சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளை கடும் போராட்டத்திற்கு பின் பெற்றது. வேட்பாளர்கள் தேர்வில் ஐவர் குழுவினரின் சிபாரிசு பட்டியல் எடுபடவில்லை. தங்கபாலுவின் ஆதரவாளர்கள் 11 பேர் இடம் பெற்றனர். இதனால், தங்கபாலு மீது ஐவர் குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.


அத்துடன், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., உட்பட 19 பேரை காங்கிரசிலிருந்து நீக்கி விட்டதாக தங்கபாலு அதிரடியாக அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கபாலுவுக்கு எதிராக தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது.


முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கே.எஸ்.அழகிரி எம்.பி., ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் தங்கபாலுவின் முடிவுக்கு தங்களது எதிர்ப்பை பத்திரிகைகள் மூலமாக தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை, டில்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வாசனும் நேற்று மாலை சென்னையிலிருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லி சென்ற அவர் இன்று சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு உள்ள சூழ்நிலை குறித்து சோனியா கேட்டறிந்தார். மேலும் 19 பேரை காங்கிரசிலிருந்து நீக்கி தங்கபாலு அறிவித்தது குறித்தும் வாசன் சோனியாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts