background img

புதிய வரவு

இலங்கை வெல்ல திருப்பதியில் ராஜபக்சே வழிபாடு-சென்னையில் இறங்கி போகிறார்

சென்னை: மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார்.

ஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார்.

போட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

இன்று இரவு திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை மும்பைக்கு புறப்படுகிறார்.

ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறியதாவது,

இலங்கை அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாதுகபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வருகையில் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.

ராஜபக்சேவின் வருகையையொட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, சாமியின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts