background img

புதிய வரவு

28 ஆண்டு கால கனவு நனவானது: இந்திய வீரர்கள் ஆனந்த கண்ணீர்; நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதற்கு பிறகு 2003-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 125 ரன்னில் தோற்றது. மும்பையில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி 2-வது முறையான உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பையை 2 அல்லது அதற்கு மேல் கைப்பற்றிய 3-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஆஸ்திரேலியா 4 முறையும், வெஸ்ட்இண்டீஸ் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்றது.

உலக கோப்பையை வென்றதன் மூலம் இந்தியாவின் 28 ஆண்டு கால கனவு நனவானது. வெற்றிக்கான ரன்னை கேப்டன் டோனி சிக்சர் மூலம் அடித்ததும் இந்தியாவே அதிர்ந்தது மைதானத்தில் இருந்த டோனியையும், யுவராஜ்சிங்கையும் மற்ற வீரர்கள் கட்டி பிடித்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

வீரர்கள் அறையில் இருந்தவர்களும் வெற்றியை பரிமாறிக் கொண்டனர். பெருமை மிக்க இந்த வெற்றியால் வீரர்கள் மைதானத்தில் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகியோர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அதிக கண்ணீர் சிந்தினார்.

இதேபோல கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர், கேப்டன் டோனி ஆகியோரும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். தெண்டுல்கருக்கு உலக கோப்பையை அர்ப்பணிக்கும் வகையில் அவரை தோளில் சுமந்து மைதானம் முழுவதும் வீரர்கள் வலம் வந்தனர். வீராட் கோலி, யூசுப்பதான், ரெய்னா, ஆகியோரே பெரும்பாலும் தெண்டுல்கரை சுமந்து வந்தனர். இந்த உணர்ச்சி பூர்வமான காட்சி மைதானத்தில் இருந்த ரசிகர்களையும், போட்டியை டெலிவிசனில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்திய மக்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இதேபோல பயிற்சியாளர் கிர்ஸ்டனையும் வீரர்கள் தோளில் சுமந்தனர். ரெய்னா, கோலி அவரை சுமந்து வந்தனர். அதோடு உலக கோப்பையுடன் வீரர்கள் மைதானம் முழுக்க ஓடி வந்தனர். ஒவ்வொரு வீரரும் தனித் தனியாக கோப்பையை வாங்கி முத்தமிட்டனர். இந்தியாவின் உலக கோப்பை வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தியா முழுக்க நேற்று விடிய விடிய இந்த கொண்டாட்டம் நடந்தது. ஒவ்வொருக்கொருவர் வெற்றியை பரிமாறிக் கொண்டனர். உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள், வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts