ரீ-மேக் படங்களுக்கு சினிமாவில் எப்போதும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. ரீ-மேக் செய்யும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியில் மாதவன்-கங்கனா நடித்த தானு வெட்ஸ் மானு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. வெகுநாட்களுக்கு பின்னர் இந்தியில் மாதவனுக்கு ஹீரோவாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தியில் இப்படம் நன்றாக வந்துள்ளதால், இதனை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கின்றனர் நம்மூர் ஆட்கள்.
படத்தில் மாதவன் கேரக்டருக்கு, பருத்திவீரன் கார்த்தி நடிப்பார் எனத் தெரிகிறது. தானு வெட்ஸ் மானு படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமான்டிக் படம் என்பதால், அந்தகேரக்டருக்கு நடிகர் கார்த்தி தான் பொறுத்தமானவர் என்று அவரை தேர்தெடுத்தாக கூறப்படுகிறது. இப்படத்தை டைரக்டர் சுராஜ் அல்லது ராஜேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. படத்திற்கான மற்ற நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

0 comments :
Post a Comment