background img

புதிய வரவு

தொடரும் தோனியின் "டை' ராசி

மும்பை: தோனியின் "டை' ராசி உலக கோப்பை தொடரிலும் நீடித்தது. இத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இறுதியில் நமது அணி உலக கோப்பை வென்று அசத்தியது.
கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., மற்றும் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த நான்கு முக்கிய தொடர்களின் போது, ஒரு போட்டி "டை' ஆனது.
* கடந்த 2007ல், தென் ஆப்ரிக்காவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், டர்பனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "பவுல்-அவுட்' முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 136 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
* கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-விக்டோரியா அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின், "சூப்பர் ஓவர்' முறையில் விக்டோரியா அணி வெற்றி பெற்றது.
* இந்த உலக கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 338 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது.
இந்த நான்கு தொடர்களில், தோனி தலைமையிலான அணி விளையாடிய ஒரு போட்டி "டை' ஆனது. இந்த ராசி கைகொடுக்க, இறுதியில் கோப்பை வென்று அசத்தியது.
---
ஸ்ரீசாந்த் ராசி
வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை முதல் லீக் போட்டியில் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்க, அடுத்த போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முக்கியமான பைனலில் இடம் பிடித்தார். இதற்கு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. கடந்த 2007ல், "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணியில், இளம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். இத்தொடரின் பைனலில், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா கொடுத்த "கேட்சை' எளிதாக பிடித்து, இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தார். இதனால் தான் கேப்டன் தோனி, இலங்கை அணிக்கு எதிரான பைனலில் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts