background img

புதிய வரவு

அவதூறு புகார்: தேர்தல் ஆணையத்திடம் ஜெ., கேப்டன் 2 நாள் அவகாசம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும் அவதூறாக பேசிய குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளி்க்குமாறு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்க இன்னும் 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரசாரக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தாரை தாக்கிப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து திமுக தேர்தல் குழு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தது. மேலும் கருணாநிதி, அவரது குடும்பத்தார் பற்றி தவறான பிரசாரம் செய்யும் ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் கேப்டன் டிவியை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் திமுக கேட்டுக் கொண்டது.

அதன்பேரில் இந்த புகார் குறித்து நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நோட்டீசுக்கு பதில் அளிக்க அவர்கள் இருவரும் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts