background img

புதிய வரவு

கோதண்டராமர் கோவில்

ஸ்தல வரலாறு::

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்த ராஜாக்கள் இனத்தை சேர்ந்தவர்களில் சிலர் ராஜபாளையம் பகுதிக்கு வந்து குடியேறினர்.

அவர்கள் அங்கு வந்தபோது தாங்கள் வழிபடுவதற்காக ஒரு ராமர் சிலையை கையோடு எடுத்து வந்தனர். அந்த சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய கோவில் எழுப்பினர்.

காலப்போக்கில் அந்த கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அழகிய சிற்பங்கள் கொண்ட கோவிலாக காட்சியளிக்கிறது. இங்குள்ள ராமர் வில் (கோதண்டம்) ஏந்தி இருப்பதால் `கோதண்டராமர்' என்று அழைக்கப்படுகிறார்.

ராமருக்கு அருகில் புன்னகை காட்டிய முகத்துடன் அவரது மனைவி சீதையும், தம்பி லட்சுமணரும் உள்ளனர். அனுமன் இவர்களுக்கு முன்பு இருகை கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு இடது பக்கம்தான் தாயார் வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் கோதண்டராமருக்கு வலது பக்கம் சீதை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

ராமருக்கு வலதுபக்கம் சீதாதேவி வீற்றிருப்பதால் அவருக்கு கூடுதல் சக்தி உண்டு என்கிறார்கள். இவரை வணங்கினால் கைக்கூடாத காரியமே இல்லை என்று கூறி மெய்சிலிர்க்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல தனியார் மற்றும் அரசு பேருந்து வசதி உள்ளது.ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் சென்று பின் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts