background img

புதிய வரவு

திமுகவினர் என்னதான் பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்-ஜெ.

மதுரை: தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடிகளையும் மீறி திமுகவினர் பணம் கொடுத்தாலும், மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

எங்களது தேர்தல் பிரசாரம் வெற்றிகரமாக உள்ளது. எங்கள் கூட்டணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. கூட்டணி முயற்சிக்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதையும் மீறி தி.மு.க.வினர் பணம் கொடுத்தாலும், மக்கள் அவர்களுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்றார் அவர்.

முன்னதாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் நாடோடிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100 பேர் சேர்ந்தனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts