background img

புதிய வரவு

மசூதியில் குண்டு வெடிப்பு 50 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நேற்று, ஒரு மசூதியில் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. இதில், 50 பேர் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காஜி கான் பகுதியில் ஷகி சர்வார் தர்பார் என்ற சூபி மசூதியில் நேற்று, "உருஸ்' எனப்படும் ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது. கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த மசூதியில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது, இரண்டு மனித வெடிகுண்டு நபர்கள் இம்மசூதியின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இக்கோர சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு, தாரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை எதிர்த்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் கூறியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts