background img

புதிய வரவு

மம்தா கட்சி ஆட்சிக்கு வந்தால் காங்., நிலை என்ன: பிரணாப்

கோல்கட்டா : "எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை வெளியே இருந்து ஆதரிப்போம். ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆட்சியில் பங்கேற்பது குறித்து, மேலிட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். முதலில் பாலத்தை நெருங்குவோம்; அதன் பிறகு பாலத்தைக் கடப்பது குறித்து யோசிப்போம்.தேர்தலில் சீட் கிடைக்காத காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்.

தேர்தலில் சீட் வேண்டும் என்பது பிறப்புரிமை கிடையாது. யாருக்கு சீட் கொடுப்பது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். மீறி போட்டி வேட்பாளராக மனு செய்பவர்கள், கட்சியிலிருந்து ஆறாண்டு காலத்துக்கு நீக்கப்படுவர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு தேவையில்லை. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதிய அதிகாரம் உள்ளது.நான் காங்கிரஸ் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட, 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதன் பின் நடந்த தேர்தலில் சீட் கிடைத்து, இன்று முக்கிய பதவியில் இருக்கிறேன். எனவே, தேர்தலில் சீட் கிடைக்காததையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts