background img

புதிய வரவு

தி.மு.க., டிபாசிட் இழந்து கின்னஸ் சாதனை படைக்கும் : ஜெ., ஆவேசம்

காரைக்குடி : ""கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு, தி.மு.க., கூட்டணி அத்தனை இடங்களிலும் டிபாசிட் இழக்க வேண்டும்,'' என, காரைக்குடியில் அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் ராஜகண்ணப்பன் (திருப்புத்தூர்), பழனிச்சாமி (காரைக்குடி), இந்திய கம்யூ., குணசேகரனை (சிவகங்கை) ஆதரித்து அவர் பேசியது: கருணாநிதியும், அமைச்சர்களும் தமிழகத்தை சூறையாடி வருகின்றனர். மின்தடை, விலைவாசி உயர்வு, ரவுடிகள் அராஜகம், மணல் கொள்ளை நடக்கிறது. இதற்கு தேர்தல் முடிவுகள் தான் சரியான தீர்வாக அமையும். அ.தி.மு.க., ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி, சட்டம் ஒழுங்கில் முன்னோடி மாநிலமாக இருந்தது. தி.மு.க., ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் சிக்கியுள்ளது.

மீண்டும் சுதந்திரம்: வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியாவை காக்க போராட்டம் நடத்தினோம். கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகத்தில் இருந்து, தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹஜ், இஸ்ரேல், மானசரோவர் புனித யாத்திரைக்கு, உதவித் தொகை வழங்கப்படும்.காரைக்குடி, தேவக்கோட்டையில், பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். தேவக்கோட்டைக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோட்டையூர், கண்டனூரில் மேம்பாலம் கட்டப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், தரம் உயர்த்தப்படும். திருப்புத்தூர், சிவகங்கை தொகுதிக்கு, என்ன தேவை என்பது, எனக்கு தெரியும்.

நலத்திட்டம்:மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பத்திற்கு பசுமை வீடுகள் வழங்கப்படும். முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். திருமண உதவித் தொகை 25 ஆயிரம் ரூபாயுடன், தாலிக்கு 4 கிராம் தங்கம் தரப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts