4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை 51 நாட்கள் ஐ.பி.எல். திருவிழா நடக்கிறது.
கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்றன. இந்த ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால் போட்டி அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் 14 “லீக்” ஆட்டம் இருக்கும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டது.10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்று அணிகள் விவரம்:-
குரூப் “ஏ”: டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ்.
குரூப்“பி”: சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். மற்ற 4 அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “ஏ” பிரிவில் உள்ள அணிகளில் புனே வாரியர்சுடன் மட்டும் 2 முறை மோதும். குலுக்கல் முறையில் இது முடிவு செய்யப்பட்டது. இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியில் ஏற்கனவே விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல், பெலிசிஸ், ஆகியோரும், பந்துவீச்சில் சவுத்தி, அஸ்வின், ஜகாட்டி, சுதிப் தியாகி உள்ளனர். கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் முத்திரை பதிக்க தவறியதால் இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. யூசுப்பதான், கேப்டன் காம்பீர், மார்கன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
சென்னை அணிக்கு எல்லா வகையிலும் நைட் ரைடர்ஸ் அணி சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொல்கத்தா அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் கடுமையாக போராடும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி செட் மேக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தப்போட்டியின் தொடக்க விழா மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இரவு 7.20 மணி வரை 50 நிமிடம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும். தொடக்க விழாவில் இந்தி சினிமா பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான்- ஸ்ரேயாவுடன் இணைந்து பங்கேற்கும் நடக நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி விவரங்களை வெளியிட போட்டி அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர்.

0 comments :
Post a Comment