background img

புதிய வரவு

ஐ.பி.எல்., வண்ணமயமான துவக்க விழா

சென்னை: சென்னையில் ஐ.பி.எல்., தொடரின் துவக்கவிழா வண்ணமயமாக நடந்தது. நடன கலைஞர்களின் ஆடல், பாடல் மற்றும் கண்கவர் வாணவேடிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ஆட்டமும் "சூப்பராக' இருந்தது.
நான்காவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர் டெவில்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.
இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, சங்ககரா (டெக்கான்) என வரிசையாக 10 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின் பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர், ஐ.பி.எல்., தொடரை முறைப்படி துவக்கி வைத்தார்.
இதன் பின் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் <உடல் முழுவதும் மூவர்ணக் கொடியின் நிறத்தை பூசிக்கொண்ட கலைஞர்கள், மகாராஷ்டிராவின் இசைக்கேற்ப, தேசிய கொடி போல அணிவகுத்தது ஆடினர். அடுத்து மும்பையின் பிரபல "டிரம்ஸ்' இசைக்கலைஞர் தபிக் குரேஷியின், இசை நிகழ்ச்சியுடன் இணைந்து தமிழகத்தின் மேள, தாளங்களை முழங்கின.
பின் ராகவ் மாத்தூர் பாடல்களை பாடினார். இதற்கேற்ப அந்தரத்தில் பறந்தவாறு நடனமாடினர். அதன் பின் மானசி ஸ்காட், சோனா மகபத்கர், அக்ரிதி கக்கர் மற்றும் குனால் கஞ்சவாலா, சுனிதி சவுகானின் இந்தி பாடல், நடன நிகழ்ச்சி நடந்தது.
ஷாருக் அசத்தல்:
இதற்கு அடுத்து பிரபல பாலிவுட் நடிகர், கோல்கட்டா அணி உரிமையாளர் ஷாருக்கான், "சக்தே இந்தியா, பில்லு...' போன்ற இந்தி பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். மேடையில் இவரது "மாஜிக்' ரசிக்கும்படி இருந்தது. பின், தமிழில் சற்று பேசி ஆறுதல் தந்த ஷாருக்கான், தமிழ்ப் பாடல்களுக்கு ஏற்ப சக கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இத்துடன் கலை நிகழ்ச்சிகள் முடிவடைய, வண்ணமிகு வாண வேடிக்கையால் மைதானமே ஜொலித்தது.
"லேசர்' இல்லை:
தமிழர்கள் நிறைந்த சென்னையில், அதிகமாக இந்திப்பாடல்களை பாடியதால், ரசிகர்கள் புரியாமல் அமர்ந்திருந்தனர். தவிர, காமன்வெல்த் விழாவைப் போல பெரிய பலூன், "லேசர் ÷ஷா' போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நேற்று நடக்கவில்லை

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts