எந்த துறையிலும் இல்லாத புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. இதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். தற்போது கிரிக்கெட் வீரர்களில் உலகில் அதிக பணம் சம்பாதிப்பவர் டோனி. இதனால் அவரது மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக டோனி ரூ.34 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளார். ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகி இதை உறுதி செய்துள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.24 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தார்.வீரர்களின் பயணம், மெடிக்கல் உள்பட பலவற்றுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16 லட்சத்துக்கு பிரிமீயம் செலுத்தி உள்ளது.
டோனிக்கு அடுத்தப்படியாக ரெய்னா ரூ.20.5 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் தெண்டுல்கர் ரூ.12 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே (இலங்கை) ரூ.20.5 கோடிக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் வீரர் ஸ்டெயின் ரூ.16 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment