background img

புதிய வரவு

கல்யாண விரதம்

பங்குனி உத்திரம் அன்று சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடத்துவார்கள். முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விரதம் இருந்து அந்த பழனியாண்டவரை வழிபடுவார்கள்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடைபெறும் 12 விழாக்கள் பற்றி தனது திருப்பூம்பாவை பதிகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் திருஞான சம்பந்தர். அதில் பங்குனி உத்திரத்தையும் ஒரு விழாவாக குறிப்பிடுகிறார்.

பங்குனி உத்திர விழாவின் மேலும் சில சிறப்புகள்::

பங்குனி உத்திர விழா வரும் காலம் கோடைகாலமாக இருப்பதால் அன்றைய தினம் கோவில்களில் பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்-மோர் வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்கிறார்கள். வாழ்க்கையில் நிம்மதி இன்றி தவிப்பவர்கள் பக்தர்களுக்கு நீர்-மோர் மற்றும் பானகம் வழங்குவது நல்லது.

அவ்வாறு செய்வது மன நிம்மதியைத் தரும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவி தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக அமையும். பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.

மகாலட்சுமி இந்த விரதத்தை கடைபிடித்து, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள். இந்த விரதத்தை கடைபிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவியான சரஸ்வதியையும் பெற்றார்கள்.

பங்குனி உத்திரம் நாளில் நடந்த நிகழ்ச்சிகள்::

ஸ்ரீராமர்-சீதை திருமணம்
முருகன்-தெய்வானை திருமணம்
மதுரை சுந்தரேஸ்வரர்-மீனாட்சி திருமணம்
ஆண்டாள்-ரங்கமன்னார் திருமணம்
ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்தது
அர்ஜுனன் அவதார நாள்.
சபரிமலை அய்யப்பனின் அவதார நாள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts