background img

புதிய வரவு

கோல்கட்டா அணி அசத்தல் வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

கோல்கட்டா: ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடரில், டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெக்கான் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார். கோல்கட்டா அணியில் சுக்லா, லாடா நீக்கப்பட்டு டசாட்டே, உனத்கட் சேர்க்கப் பட்டனர். டெக்கான் அணியில் மாற்றம் எதுவுமில்லை.
காலிஸ் அரைசதம்:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா துவக்கம் தந்தனர். ஸ்டைன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த, காலிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசிய பிஸ்லா (19), அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினார். காலிசுடன், கேப்டன் காம்பிர் இணைந்தார்.
மறுமுனையில் ஓஜா பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த காலிஸ், டுமினியின் பந்தில் "சூப்பர் சிக்சர் அடித்து, அரைசதம் (53) கடந்தார். ஆனால் அடுத்த பந்தில், சிகர் தவானிடம் பிடி கொடுத்து திரும்பினார்.
காம்பிர் அபாரம்:
அதன் பின் காம்பிர் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் துவங்கினார். கிறிஸ்டியன், ஓஜா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவரது "சகா மனோஜ் திவாரி, டுமினியின் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து மிரட்டினார். இந்நிலையில் காம்பிர் (29 ரன்கள், 18 பந்து) வெளியேறினார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (22), ஸ்டைன் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து, அவரிடமே வீழ்ந்தார். கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (30) அவுட்டாகாமல் இருந்தார். டெக்கான் சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
துவக்க சரிவு:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சிகர் தவான் (7), ஜாகி (3) இருவரும் அதிர்ச்சித் துவக்கம் கொடுத்தனர். கேப்டன் சங்ககராவும் (16) நிலைக்கவில்லை. கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டுமினி (6), விரைவில் திரும்பினார்.
சிப்லி போராட்டம்:
ஒரு முனையில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த போதும், மறுபக்கம் சிப்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யூசுப் பதான் பந்தில் சிக்சர் விளாசிய சிப்லி, பட்டியா ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவர் 48 ரன்னுக்கு அவுட்டாகி, அரைசத வாய்ப்பை இழந்தார்.
கிறிஸ்டியன் ஆறுதல்:
அதிக தொகைக்கு (ரூ. 4.08 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஆஸ்திரேலிய உள்ளூர் வீரரான கிறிஸ்டியன் (25 ரன்கள், 13 பந்து), ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். பின் ரவி தேஜாவும் (15) வெளியேற டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது.
கடைசி நேரத்தில் ஸ்டைன் (13), அமித் மிஸ்ரா (12*) போராடிய போதும், 20 ஓவரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
காலிஸ்(கே)தவான்(ப)டுமினி 53(45)
பிஸ்லா-எல்.பி.டபிள்யு.,(ப)மிஸ்ரா 19(21)
காம்பிர்(ப)மிஸ்ரா 29(18)
திவாரி-அவுட் இல்லை- 30(21)
யூசுப் பதான்(கே)ஜாகி(ப)ஸ்டைன் 22(15)
உதிரிகள் 10
மொத்தம் (20 ஓவரில் 4 விக்.,) 163
விக்கெட் வீழ்ச்சி: 1-51(பிஸ்லா), 2-90(காலிஸ்), 3-133(காம்பிர்), 4-163(யூசுப் பதான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 4-0-33-1, இஷாந்த் சர்மா 3-0-27-0, கிறிஸ்டியன் 2-0-19-0, அமித் மிஸ்ரா 4-0-19-2, பிரக்யான் ஓஜா 4-0-26-0, ரவி தேஜா 1-0-9-0, டுமினி 2-0-23-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
தவான்-ரன் அவுட்(மார்கன்) 7(7)
ஜாகி(ப)இக்பால் 3(9)
சிப்லி(கே)காலிஸ்(ப)பட்டியா 48(40)
சங்ககரா(கே)காலிஸ்(ப)பட்டியா 16(15)
டுமினி(கே)காலிஸ்(ப)இக்பால் 6(8)
கிறிஸ்டியன்(கே)டசாட்டே(ப)இக்பால் 25(13)
ரவி தேஜா(கே)காலிஸ்(ப)உனத்கட் 15(10)
ஸ்டைன்(ப)உனத்கட் 13(12)
மிஸ்ரா-அவுட் இல்லை- 12(5)
இஷாந்த்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 8 விக்.,) 154
விக்கெட் வீழ்ச்சி: 1-10(ஜாகி), 2-15(சிகர் தவான்), 3-53(சங்ககரா), 4-81(டுமினி), 5-88(சிப்லி), 6-124(கிறிஸ்டியன்), 7-127(ரவி தேஜா), 8-146(ஸ்டைன்).
பந்து வீச்சு: இக்பால் அப்துல்லா 4-0-24-3, பாலாஜி 4-0-31-0, யூசுப் பதான் 3-0-22-0, உனத்கட் 4-0-37-2, பட்டியா 4-0-29-2, டசாட்டே 1-0-7-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts