background img

புதிய வரவு

ஜோதிடம் பலித்தது

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்லும் என்ற, ஜோதிடரின் கணிப்பு பலித்தது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் என, காலிறுதி போட்டிகள் துவங்கும் முன்பாக (மார்ச் 21), மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்து இருந்தார்.
அதன் விபரம்:
கடந்த 1981ல் பிறந்ததால், கேப்டன் தோனிக்கு கிரக பலன் அதிகமாக கிடைக்கும். இதனால் தோனி கோப்பை வெல்வார். ஆனால் 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககரா (1977), சக வீரர்களின் பலன் கிடைக்காத தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் (1981), இங்கிலாந்தின் ஸ்டிராஸ் (1977), பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980), நியூசிலாந்தின் வெட்டோரி (1979), வெஸ்ட் இண்டீசின் சமி (1983) ஆகியோருக்கு கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லாததால், இம்முறை கோப்பை கிடைக்காது.
இவ்வாறு அவர் கணித்து இருந்தார்.
ஜோதிடம் பலித்தது:
அதேபோல, இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பைனலில் இலங்கையை வென்று, இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பை வென்று சாதித்தது.
----
சாதித்தது "எம்' மந்திரம்
இந்திய அணிக்கு இம்முறை "எம்' மந்திரம் கைகொடுத்தது எனலாம். அதாவது உலக கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில எழுத்தான "எம்' என்று துவங்கும் இடங்கள் அல்லது மைதானங்களில் நடந்த போட்டிகளில் வென்று வந்தது. முதல் போட்டி நடந்த மிர்புர்(எதிர், வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம்(எதிர், அயர்லாந்து), எம்.ஏ. சிதம்பரம்(எதிர்,வெ.இண்டீஸ்), மொடிரா(எதிர், ஆஸி.,), மொகாலி(எதிர், பாக்.,) ஆகிய இடங்களில் வெற்றிபெற்றது. பைனல் நடந்த வான்கடேவும் மும்பையில் தான் இருந்தது. இதனால் இதிலும் வெல்லும் என்று நம்பப்பட்டது. தவிர, மகேந்திர சிங் தோனி என்ற பெயரும் "எம்' என்ற எழுத்தில் தான் துவங்குகிறது. இதற்கேற்ப, எல்லாம் சரியாக நடக்க, தோனி தலைமையிலான அணி கோப்பை வென்று அசத்தியது.
--
சரியாக கணித்த வார்ன்
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்ற போட்டிகளின் முடிவினை, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன், முன்னதாகவே சரியாக கணித்து தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளிட்டு வந்தார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி "டை'யில் முடியும் என இவர் சரியாக கணித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும். சேசிங் செய்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். இருப்பினும், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
--
பிரதமருக்கு கிலானி பாராட்டு
இந்திய அணி கோப்பை வென்றதுக்கு, பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். தவிர, விளையாட்டு தொடர்பின் மூலம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு மேம்படும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
--
"லோகோ' அறிமுகம்
பத்தாவது உலக கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து அடுத்த தொடரை (2015) ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதுதொடர்பான "லோகோவை' ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts