background img

புதிய வரவு

உலக லெவன் அணியில் சச்சின், யுவராஜ் * தோனிக்கு இடமில்லை

துபாய்: உலக கோப்பை தொடரில் அசத்திய வீரர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள உலக லெவன் ஒருநாள் அணியில் இந்தியாவின் சச்சின், யுவராஜ் சிங், ஜாகிர் கான் இடம் பெற்றனர். கோப்பை வென்ற கேப்டன் தோனிக்கு இதில் இடமில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், உலக கோப்பை தொடரில் சிறப்பாக சாதித்தவர்கள் திறமையின் அடிப்படையில், உலக லெவன் ஒருநாள் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் சச்சின், யுவராஜ் சிங், ஜாகிர் கான் ஆகிய மூன்று பேர் இடம் பெற்றனர். அதிகபட்சமாக இலங்கை அணியில் இருந்து சங்ககரா, ஜெயவர்தனா, தில்ஷன், முரளிதரன் ஆகிய நான்குபேர் தேர்வாகியுள்ளனர்.
தென் ஆப்ரிக்க அணியில் இருந்து இரண்டு, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியில் இருந்து தலா ஒருவர் இதில் இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டன் பதவிக்கு, விக்கெட் கீப்பர் கேப்டனான தோனி, சங்ககரா இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், இத்தொடரில் தோனி சரியானபடி பேட்டிங் செய்யாததால், சங்ககரா இந்த இடத்தை தட்டிச் சென்றார்.
11 பேர் கொண்ட அணி விபரம்:
சங்ககரா (விக்கெட் கீப்பர்/கேப்டன்), சச்சின், யுவராஜ், ஜாகிர் கான், ஜெயவர்தனா, தில்ஷன், முரளிதரன், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஸ்டைன், வாட்சன் (ஆஸி.,), அப்ரிதி (பாக்.,). 12 வது வீரராக டிம் சவுத்தி (நியூசி.,) இடம் பெற்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts