வேலூர் : ""எங்களை தோற்கடியுங்கள்; நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்,'' என, வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார்.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: முந்தா நாள் அரசியலுக்கு வந்தவர்கள் எங்களை விமர்சனம் செய்கின்றனர். 75 ஆண்டு காலம் அரசியலில் இருந்து வந்தவன். பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்தவன். இந்த சமுதாயத்துக்கு இன்னமும் உழைத்துக் கொண்டுள்ளேன். ஆனால், இவர்கள் இப்படி பேசலாமா?
நான் தமிழக முதல்வராக இருக்கின்றேனா, இல்லையா என்ற சந்தேகம் வந்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி அரசு ஆள்கிறதா, தேர்தல் கமிஷன் ஆள்கிறதா? தேர்தல் கமிஷனுடன் மோத விருப்பமில்லை.அவர்கள் நடுநிலையாக செயல்பட்டால் குறை சொல்ல மாட்டேன். சட்டப்படி, நியாயப்படி நடக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.
கருணாநிதி தமிழகத்தை ஆளக்கூடாது என்கின்றனர். அண்ணாதுரை சொன்னபடி, படி அரிசி போடவில்லை. கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டான். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டான்.இவன் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், நம்மால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று சிலர் நினைக்கின்றனர். தமிழகத்தில் இலவச "டிவி', காஸ் அடுப்பு, "108' ஆம்புலன்ஸ் என, பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இவனை விட்டு வைத்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் இவனை அழிக்க நினைக்கின்றனர்.நான், இந்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி தரவில்லையா? ஆறாவது முறையும் நல்லாட்சி தருவோம்.ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். என்னை, நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்தார். 12 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
நான் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை சிதைத்து விட்டார்.இத்தகைய ஆட்சியை தொடர ஓட்டளிக்கும்படி ஜெயலலிதா கேட்கின்றார். இந்த ஆட்சி தொடர வேண்டுமா? இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நான் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்ய முடியாமல் போகும். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்துணவில் முட்டை போட மாட்டார். அதனால், மாணவர் முட்டை போடும் நிலைமை வரும். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஜெயலிதாவை ஆதரியுங்கள். எங்களை தோற்கடியுங்கள். நாங்கள் தோற்றாலும், உங்களை மறக்க மாட்டோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

0 comments :
Post a Comment