background img

புதிய வரவு

யுவராஜ் அணி அபார வெற்றி! * பஞ்சாப் லெவன் ஏமாற்றம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணி, கில்கிறிஸ்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் மடமட:
பஞ்சாப் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் அல்போன்சா தாமஸ். இவரது வேகத்தில் கில்கிறிஸ்ட்(1) அவுட்டானார். ஸ்ரீகாந்த் வாக் வீசிய அடுத்த ஓவரில் ஷான் மார்ஷ்(1) நடையை கட்டினார். தொடர்ந்து மிரட்டிய தாமஸ் பந்தில் வல்தாட்டி(6) வீழ்ந்தார். தினேஷ் கார்த்திக்(0) அணியை கைவிட, 4 விக்கெட்டுக்கு 9 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
மெக்லாரன் அரைசதம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பினர். சன்னி சிங்(12) வீணாக ரன் அவுட்டானார். அபிஷேக் நாயர்(12) ஏமாற்றினார். இதற்கு பின் "டெயிலெண்டர்கள்' உதவியுடன் பொறுப்பாக ஆடினார் மெக்லாரன். பியுஸ் சாவ்லா(15) ஓரளவுக்கு தாக்குப்பிடித்தார். தாமஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த மெக்லாரன், அரைசதம் கடந்து அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்தது. மெக்லாரன்(51) அவுட்டாகாமல் இருந்தார்.
எளிதான வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு முதல் பந்திலேயே "ஷாக்' கொடுத்தார் பிரவீண் குமார். இவரது வேகத்தில் கிரேம் ஸ்மித் "டக்' அவுட்டானார். இதற்கு பின் ஜெசி ரைடர்(31), மன்ஹாஸ்(35) இணைந்து பொறுப்பாக ஆடினர். அடுத்து வந்த உத்தப்பா(22*), யுவராஜ் சிங்(21*) சேர்ந்து அதிரடியாக ஆடினர். இருவரும் பிரவீண் குமார் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அணிக்கு முதல் வெற்றியை பெற்று தந்தனர். கடந்த முறை பஞ்சாப் அணிக்காக ஆடிய யுவராஜ், இம்முறை அறிமுக அணியாக களமிறங்கியுள்ள புனே அணியின் கேப்டனாக அருமையாக செயல்பட்டார். இவர், அபிஷேக் நாயர் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட, புனே அணி 13.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து, சுலப வெற்றி பெற்றது.
மூன்று விக்கெட் வீழ்த்திய புனே வீரர் ஸ்ரீகாந்த் வாக், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.





ஸ்கோர் போர்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கில்கிறிஸ்ட்(கே)உத்தப்பா(ப)தாமஸ் 1(3)
ஷான் மார்ஷ்(கே)சர்மா(ப)வாக் 1(3)
வல்தாட்டி(கே)ரைடர்(ப)தாமஸ் 6(6)
தினேஷ் கார்த்திக்(கே)சர்மா(ப)வாக் 0(7)
நாயர்(கே)யுவராஜ்(ப)ரைடர் 12(18)
சன்னி சிங்-ரன் அவுட்-(யுவராஜ்/உத்தப்பா) 12(6)
மெக்லாரன்-அவுட் இல்லை- 51(43)
சாவ்லா(கே)<உத்தப்பா(ப)வாக் 15(28)
பிரவீண்(கே)உத்தப்பா(ப)பார்னல் 3(5)
ரிம்மிங்டன்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 10
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-2(கில்கிறிஸ்ட்), 2-5(ஷான் மார்ஷ்), 3-9(வல்தாட்டி), 4-9(தினேஷ் கார்த்திக்), 5-36(சன்னி சிங்), 6-45(நாயர்), 7-80(சாவ்லா), 8-102(பிரவீண்).
பந்துவீச்சு: தாமஸ் 4-0-27-2, வாக் 3-0-16-3, பார்னல் 4-0-20-1, முரளி கார்த்திக் 1-0-10-0, ரைடர் 3-1-9-1, மன்ஹாஸ் 3-0-14-0, ராகுல் சர்மா 2-0-12-0.
புனே வாரியர்ஸ்
ஸ்மித்(கே)மெக்லாரன்(ப)பிரவீண் 0(1)
ரைடர்(கே)கில்கிறிஸ்ட்(ப)மெக்லாரன் 31(17)
மன்ஹாஸ்(கே)கில்கிறிஸ்ட்(ப)நாயர் 35(32)
உத்தப்பா-அவுட் இல்லை- 22(14)
யுவராஜ்-அவுட் இல்லை- 21(15)
உதிரிகள் 4
மொத்தம்(13.1 ஓவரில் 3 விக்.,) 113
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஸ்மித்), 2-60(மன்ஹாஸ்), 3-68(ரைடர்).
பந்துவீச்சு: பிரவீண் 3-0-28-1, ரிம்மிங்டன் 3-0-19-0, மெக்லாரன் 3-0-26-1, சாவ்லா 1-0-12-0, நாயர் 3.1-0-27-1.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts