background img

புதிய வரவு

கொல்கட்டா ஆட்டம் பெங்களூருக்கு மாற்றம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறாது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தை பெங்களூருக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வைத்த பரிசீலனையை ஐ.சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

1 லட்சம் பேர் அமரும் வசதிகொண்ட கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டிக்காக ஈடன்கார்டன் ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடையாததால், கொல்கத்தாவில் நடக்க இருந்த இந்தியா-இங்கிலாந்து (பிப்ரவரி 27-ந் தேதி) ஆட்டத்தை அங்கு நடத்த முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் அறிவித்தது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மூலமாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்தது. அத்துடன் போட்டியை இழக்காமல் இருக்க மேற்குவங்காள அரசும் பகிரத முயற்சியில் இறங்கியது. ஐ.சி.சி.தலைவர் சரத்பவாரை தொடர்பு கொண்டு பலரும் வற்புறுத்தினார்கள்.

போட்டி அமைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 8 உறுப்பினர்களும் முடிவை மறுபரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் சரத்பவார் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடைபெறாது என்ற முடிவை ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளது. ஐ.சி.சி.யின் முடிவை சரத்பவார், மேற்குவங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மைதானத்தில் போட்டியை நடத்த எடுத்த முயற்சி கைகூடாமல் போனதால் பெங்கால் கிரிக்கெட் சங்கம் மட்டுமின்றி ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட கொல்கத்தா ஆட்டம் பெங்களூர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தை பெங்களூரில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரையை ஐ..சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

5ஆ‌ம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

த‌மிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் வரு‌ம் 4ஆ‌ம் தேதிக்கு பதிலாக 5ஆ‌ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறதஎ‌ன்று சட்ட‌ப்பேரவை செயலர் மா.செல்வராஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இந்நிலையில் செங்கம் தொகுதி காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் போளூர் வரதன் மரணம் அடைந்ததையொட்டி 4ஆ‌ம் தேதி சட்டசபையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து அன்று சபை நாள் முழுவதும் த‌ள்‌ளிவைக்கப்படுகிறது. 5ஆ‌ம் தேதி சட்ட‌ப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது தொட‌ர்பாக சட்ட‌ப்பேரவை செயலர் மா.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2011-2012ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை, பிப்ரவரி 4ஆம் தே‌தி‌க்கு பதிலாக 5ஆம் தே‌‌தி அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்பதற்கு ஆளுந‌ர் ப‌ர்னாலா தே‌தி குறித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே பேரவையில் அறிவித்தவாறு, சட்ட‌ப்பேரவை பிப்ரவரி 4ஆம் தே‌தி காலை 9.30 மணிக்கு கூடும் எ‌ன்று செ‌ல்வரா‌ஜ் தெரிவித்து‌ள்ளா‌ர்.

நியாய‌விலை கடைக‌ளி‌ல் இ‌ன்று மு‌த‌ல் பரு‌ப்பு ரூ.30, பாமா‌யி‌ல் ரூ.25‌க்கு ‌‌வி‌‌ற்பனை

நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு ‌கிலோ உளு‌த்த‌ம் பரு‌ப்பு, துவ‌‌ர‌ம் பரு‌ப்பு 30 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு ‌‌லி‌ட்ட‌ர் பாமா‌யி‌ல் 25 ரூபா‌ய்‌க்கு‌ம் இ‌ன்று மு‌த‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக‌ம் முழுவ‌து‌ம் 30 ஆ‌யிர‌ம் ‌நியாய‌விலை கடைக‌ளி‌‌ல் இ‌ன்று முத‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.

இத‌‌ற்கு மு‌ன் ‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு‌ ‌கிலோ உரு‌த்த‌ம் பரு‌ப்பு, துவர‌ம் பரு‌ப்பு 40 ரூபா‌‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு வ‌ந்தது. 30 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமா‌யி‌ல் இ‌ன்று 25 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெளிச்சந்தையிலமுதலதுவரமபருப்பகிலூ. 63இலஇருந்தூ.73க்கும், 2துவரமபருப்பூ. 55இலஇருந்தூ. 65க்குமவிற்பனையாகிறது.

இதபோலகிலூ. 63க்கவிற்பனையாமுதலஉளுத்தமபருப்பூ.68‌க்கும், ூ. 58க்கவிற்பனையான 2ஆமஉளுத்தமபருப்பூ. 63க்குமவிற்பனசெய்யப்படுகிறது.

ஒரகிலூ.60க்கவிற்பனையாபாமாயிலஇப்போதூ.64க்கவிற்பனையாகிறதஎன்பதகுறிப்படத்தக்கது.

வேட்டவலத்தில் நாளை அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலமாவட்டமவேட்டவலமபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்து‌், மழையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்களு‌க்கு ‌நிவாரதொகவழ‌ங்‌கிடாத ‌ி.ு.க. அரசக‌ண்டி‌த்து‌ம் அ.இ.அ.ி.ு.சார்பிலநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறு‌கிறது.

இததொடர்பாஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொதுசசெயலரஜெயலலிதா இன்றவெளியிட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், திருவண்ணாமலமாவட்டம், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்வேட்டவலமபேரூராட்சியில், அரசஒப்பந்விதிமுறைகளமீறி ூ.58 லட்சமமதிப்பீட்டிலநடைபெறுமசிமெண்டசாலபணிகளிலமுறைகேடுகளநடைபெறுவதாஅப்பகுதி மக்களதெரிவிக்கின்றனர்.

மக்களபணிகளிலபேரூராட்சி நிர்வாகமகவனமசெலுத்துவதில்லஎன்றும், அண்மையிலபெய்மழையாலபாதிக்கப்பட்விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்குமநிவாரஉதவி இதுவரவழங்கப்படவில்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

மேலும், குடிநீருடனகழிவுநீரகலந்தவருவதைததடுத்தநிறுத்நடவடிக்கஎடுக்காபேரூராட்சி நிர்வாகம், வீட்டவரி, குடிநீரவரி, கட்டிவரைபஅங்கீகாவரி ஆகியவற்றமட்டுமஉயர்த்தி விட்டதாகவும், வேட்டவலத்திலஉள்ஆரம்சுகாதாநிலையத்திலமருத்துவர்களஇல்லஎன்றுமமக்களதெரிவிக்கின்றனர்.

வேட்டவலமநகரத்திலஇயங்கி வந்மினகட்டவசூலிப்பமையமமூன்றகிலமீட்டரதொலைவிலஉள்சொரத்தூரகிராமத்திற்கமாற்றப்பட்டதனகாரணமாமக்களுக்கமிகுந்சிரமங்களஏற்பட்டுள்ளதாகவும், பேருந்தநிலையமகட்டப்பட்டுமசெயல்பாட்டிற்கவரவில்லஎன்றும், திருக்கோவிலூரசெல்லுமநெடுஞ்சாலமிகவுமபழுதடைந்துள்ளதாகவும், குறித்காலத்திலசமையலஎரிவாயசிலிண்டரகிடைப்பதில்லஎன்றுமபுகார்களவந்வண்ணமஉள்ளன.

எனவே, வேட்டவலமபேரூராட்சியிலநிலவுமசீர்கேடுகளுக்குககாரணமாபேரூராட்சி நிர்வாகத்தைககண்டித்தும், கீழ்பென்னாத்தூரசட்டமன்தொகுதிக்கஉட்பட்பகுதிகளிலமழையினாலபாதிக்கப்பட்மக்களுக்கநிவாரணததொகவழங்கிடாமாநிஅரசைககண்டித்தும் அ.இ.அ.ி.ு.க சார்பில் தே‌ர்த‌ல் ‌பி‌ரிவு இணை‌ச் செயல‌ர் பாலக‌ங்கா தலைமை‌யி‌ல் நாளவேட்டவலமகாந்தி சிலஅருககண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றஜெயலலிததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மாநில முதலமை‌ச்ச‌ர்கள் மாநாடு தொடங்கியது


மாநாட்டை இ‌ன்று காலை தொட‌ங்‌கிய வை‌த்த பிரதமர் மன்மோகன் ‌சி‌ங் உரை ‌நிக‌ழ்‌த்‌தி வரு‌கிறா‌ர்.

மாநாட்டில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதி உள்பட பல்வேறு மாநில முதலமை‌ச்ச‌ர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்பு, மாவோயிஸ்ட் ‌பிர‌ச்சனை, காவ‌ல் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், காஷ்மீர் நிலைமை, புலனாய்வு, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

சீனா: லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவில் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில்,அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).

கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன.பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவை விட பாக்.கிடம் அதிக அணு ஆயுதங்கள்

இந்தியாவை விட பாகிஸ்தானன்டம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்துவிட்டதாகவும், தற்போது அந்நாட்டிடம் 110 அணுஆயுதங்கள் இருப்பதாகவும் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான மையத்தின் தலைவர் ஆல்பிரைட் இத்தகவலை தெரிவித்தாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டிடம் 30 முதல் 80 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் இந்த அணுஆயுதங்கள் இந்தியாவின் முக்கிய நிலைகளை குறிவைத்து எல்லை நெடுகிலும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது

அடிக்கடி வயிற்றில் பிரச்சினையா?

அடிக்கடி வயிற்றில் பிரச்சினையா?சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.


* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.


* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.


* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.


* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.


* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.


* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.


* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

அமிதாப் பச்சனின் புத்தா

தெலுங்குப் பட இயக்குனர் பு‌ி ஜெகன்நாத் இயக்கும் இந்திப் படத்தில் அமிதாபபச்சன் நடிக்கிறார். படத்தின் பெயர் புத்தா (Buddha). புத்தா என்றால் வயதான மனிதன் என்று அர்த்தமாம்.

இந்தப் படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறார் அமிதப்பச்சன். அதாவது ‌ரியல் கேரக்டர். ஆனால் கதைப்படி அமிதாப் தனது வயதை ஒத்துக் கொள்ளாதவர். இன்றும் தனக்கு 25 வயதுதான் என்று நம்பக் கூடியவர். 25 வயது வாலிபர்களைப் போலவே அவரது உடையும் ஸ்டைலும் இருக்கும்.

இந்த வித்தியாசமான கேரக்டருக்காக தனது தாடியையும், தலைமுடியையும் கல‌ரிங் செய்யப் போகிறாராம் அமிதாப். அத்துடன் படம் நெடுக சின்னப் பையன்களின் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் வலம் வரப் போகிறாராம். பிக் பி-யின் யூத் கெட்டப்பைப் பார்க்க இப்போதே காத்திருக்கிறது பாலிவுட்.

யுத்தம் செய்

கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயா‌ரித்திருக்கும் படம் யுத்தம் செய். மிஷ்கின் படத்தை இயக்கியுள்ளார்.
FILE

யுத்தம் செய், தொடர் கொலைகள் செய்யும் ஒரு கொலைகாரனை சிபிசிஐடி போலீஸான சேரன் துப்பறிந்து கண்டுபிடிக்க முயல்வதை சித்த‌ரிக்கிறது. நாட்டில் ஒரு கொலை நடந்தால் அதை இரண்டு நாள் நியூஸாக பாவித்து ஒவ்வொருவரும் கடந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பொறுப்பின்மை எவ்வளவு பெ‌ரிய தவறு என்பதை இப்படம் சொல்ல முயல்வதாக பேட்டியில் மிஷ்கின் தெ‌ரிவித்துள்ளார்.

முக்கியமான வேடம் சேரனுக்கு. அவர்தான் படத்தின் நாயகன். அவருக்கு உதவியாளராக வருகிறார் தீபா ஷா. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மா‌ரிமுத்துவும் படத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் படங்களில் தொடர்ந்து வரும் மஞ்சள் சேலை அணிந்த பெண்ணின் குத்துப் பாடலும், நடனமும் இதிலும் உண்டு. இதில் மஞ்சள் சேலை பாக்கியம் கிடைத்திருப்பது நீது சந்திராவுக்கு. அவருடன் இயக்குனர் அமீர் ஆடியிருக்கிறார். இவர்களுடன் ஒய்.‌ஜி.மகேந்திரன், யுகேந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவரான சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். குறும்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். திரைப்படத்துக்காக அவர் தனது பெயரை கே என மாற்றியுள்ளார். கே என்பது காப்காவின் விசாரணை நாவலில் வரும் பிரதான கதாபாத்திரத்தின் பெயர்.

வரும் 4ஆம் தேதி யுத்தம் செய் திரையரங்குக்கு வருகிறது.

பாஸ்கோ எஃகு தொழிற்சாலை அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி

ஒரிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திற்கு அருகே தென் கொரியாவின் போஹாங் ஸ்டீல் கம்பெனி (பாஸ்கோ) தனது எஃகு உருக்காலையை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஓராண்டுக் காலமாக அனுமதி அளிக்காமல் இருந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பில் உள்ள சுற்றுச் சூழல் மற்றம் வன அமைச்சகம், சுற்றுச் சூழல் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்கள் அமைத்த கூட்டுக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 2007ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நிபந்தனையுடன் மேலும் 32 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜதாதர்மோஹன் நதிக் கரைக்கும் பாரதீப் துறைமுகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 1,620 ஹெக்டேர் நிலத்தில் பாஸ்கோவின் எஃகு உருக்காலை அமையவுள்ளது. இதில் 1,253 ஹெக்டேர் வனப் பகுதியாகும். வருடத்திற்கு 1.2 கோடி மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது பாஸ்கோ அமைக்கவுள்ள தொழிற்சாலையாகும்.

சீன மீன் வதக்கல்

தேவையான பொருட்கள் :


மீன் - அரை கிலோ
பொடியாக நறுக்கிய பூண்டு - 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
மைதா - 2 கைப்பிடி அளவு
சோளமாவு - 1 கைப்பிடி அளவு
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவைக்கேற்ப


செய்முறை :


நறுக்கிய மீனை எலுமிச்சம் பழச்சாறு,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து ஊற வைக்கவும்.மாவைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி மீனை மாவில் தோய்த்து எடுத்து பொரிக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அஜினோமோட்டோ சர்க்கரை,உப்பு சேர்க்கவும். கலர் (கடைகளில் கிடைக்கும்)சேர்த்துக் கொள்ளவும்.கிரேவி பதத்தில் மசாலா கெட்டியாக வந்ததும் மீனைச் சேர்த்துப் போட்டுக்கிளறி இறக்கவும்.

எகிப்தில் ௦இருந்து 280 பேர் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்


எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்துள்ளதா‌ல் அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியர்களை அழைத்து வர தனி விமானம் அனுப்பப்பட்டது.

முதல் கட்டமாக நேற்று 320 பேர் மும்பை வந்து சேர்ந்தனர். மேலும் ஒரு தனி விமானம் மூலம் 280 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, எகிப்து தலைநகர் கெய்ரோவில் இன்று லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

புது‌ச்சே‌ரி‌யி‌‌ல் நாளை இடை‌க்கால ப‌ட்ஜெ‌ட் தா‌க்‌க‌ல்

புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நாளை இடை‌க்கால ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

முதலமை‌ச்‌ச‌ர் வை‌த்‌தி‌லி‌ங்க‌ம் இடை‌க்கால ப‌ட்ஜெ‌ட்டை தா‌க்க‌ல் செ‌‌ய்‌கிறா‌ர்.

ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் மு‌ன்ன‌ர் ஆளுந‌ர் இ‌க்பா‌ல் ‌சி‌ங் உரையா‌ற்று‌கிறா‌ர்.

‌மீனவ‌ர்க‌ள் நல‌ன் கா‌க்க வ‌‌ழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்




''மீனவர்களநலனைககாக்வேண்டிவழிமுறைகளைககண்டறிஇல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவசெய்தஉள்ளோமஎ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு பிரதமரமன்மோகனசிங் பதிலகடிதமஅனுப்பியுள்ளார்.

இது தொட‌ர்பாக ம.ி.ு.தலைமஅலுவலகம் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவரி 22ஆமதேதி வைகோ, பிரதமரமன்மோகனசிங்கைசசந்தித்து, இலங்கராணுவத்தாலகைதசெய்யப்பட்வழக்கறிஞரகயல்விழியவிடுவித்துததமிழகமகொண்டவந்ததசேர்த்ததற்கநன்றி தெரிவித்ததோடு, இலங்கைததமிழரபிரச்சனகுறித்தும், தமிழமீனவரபிரச்சனகுறித்துமபிரதமரிடமகடிதத்தைககொடுத்து, தனதகருத்துகளையுமதெரிவித்தார்.

ஆனால், அதநாளிலபுஷ்பவனத்தைசசார்ந்மீனவரஜெயக்குமார், இலங்கைககடற்படையினராலகொடூரமாகககொலசெய்யப்பட்செய்தி குறித்தஅதிர்ச்சியையும், கண்டனத்தையுமதெரிவித்தஜனவரி 23ஆமதேதி வைகஅவர்களபிரதமருக்குததொலைநகலசெய்தி அனுப்பினார்.

ஜனவரி 25ஆமதேதியிட்டபிரதமர், வைகோவுக்கஎழுதியுள்கடிதமஇன்றகிடைத்தது.

20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு : மியான்மரில் பார்லிமென்ட் கூடியது

நேபீட்டா : மியான்மர் வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முறையாக பார்லிமென்டின் இரு அவைகளும் கூடின. இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், நாடு முழுவதும் நேற்று 14 மாகாண சட்டசபைகளும் முதன் முறையாகக் கூடின.
மியான்மரில் 1962ல் இருந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அவுங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில், ராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி(யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதன் முதலாக அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டம் துவங்கியது. மொத்தம் 440 இடங்கள் கொண்ட கீழவையும், 224 இடங்கள் கொண்ட மேலவையும் ஒரே நேரத்தில் நேற்று காலை துவங்கின. பெரும்பான்மையான இடங்களில் யு.எஸ்.டி.பி., கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். அவுங் சான் சூச்சி கட்சி தேர்தலில் பங்கேற்காததால் அதன் உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. கூட்ட நடவடிக்கைகளைப் பார்வையிட பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கேமரா, மொபைல் போன், கணினிகள், டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் பொருட்களை பார்லிக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. பார்லியின் இந்த முதல் கூட்டம், இரண்டு வாரங்களுக்கு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் 14 மாகாண சட்டசபைகளும் நேற்று முதன் முறையாகக் கூடின. அவற்றிலும் பெரும்பான்மை உறுப்பினர்களாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இடம் பெற்றனர்.
சூச்சி கட்சி இணையதளம் துவக்கம்: இதற்கிடையில், சூச்சி தன் கட்சியின் www.nldburma.org என்ற இணையதளத்தை நேற்று துவக்கி வைத்தார். "உலக மலர்ச்சிக்கான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு நம்மிடையே தகவல் தொடர்பு அவசியம். மிக விரைவில் நாம் ஜனநாயகத்தை அடைவோம் என்று நான் நம்புகிறேன்' என இந்த இணையதளத்தில் அவர் எழுதியுள்ளார்.

இலங்கை-மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் கிரிக்கெட் மழையால் ஆட்டம் ரத்து

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்தது. அப்போது உணவு இடைவேளை துவங்கியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கும் நேரத்தில் மழை பிடிக்கத் தொடங்கியது. அது 3.20 வரையிலும் பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது.

வெற்றிக்கு சச்சினின் பங்கு முக்கியமானது - சாந்து

பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வெற்றியில் சச்சின் டெண்டுல்கரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற 'கபில்ஸ் டெவில்ஸ்' அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு உலக சாம்பியனான கபில்தேவ் தலைமை இந்திய அணியைக் காட்டிலும் தற்போது மகேந்திர சிங் தலைமை இந்திய அணி அனுபவம், திறமை இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது.

மேலும் தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றிக்கு ஆட்டத்தைத் திருப்பும் யுவ்ராஜ், யூசுஃப் பத்தான், தோனி ஆகியோர் அணியில் இருக்கின்றனர்.

டெண்டுல்கர் தற்போது இந்த உலகக் கோப்பையை வெல்வதில்தான் தன் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

அவர் நன்றாகத் தன்னைத் தயார் செய்து கொள்வார், அவர் எப்போதும் உழைப்பதில் வல்லவர். இவ்வாறு பல்வீந்தர் சிங் சாந்து கூறியுள்ளார்.

1 பிப்ரவரி 2011 தின பலன்


மேஷம்
தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
 
ரிஷபம்
இன்று மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் காரியத்தடைகள், அலைச்சல் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. மாலைப் பொழுதிலிருந்து மனநிம்மதி கிட்டும். முன்கோபம் குறையும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், சிவப்பு
 
 
மிதுனம்
காலைப்பொழுது சிறப்பாக அமையும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
 
கடகம்
இன்று நம்பிக்கைக்கு‌ரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, மயில் நீலம்
 
 
சிம்மம்
புதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
கன்னி
எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்துறன் பெறுகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரெவுன், ஆரஞ்சு
 
 
துலாம்
இன்று மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர் களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு
 
 
விருச்சிகம்
வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனபழுது சீராகும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், வெளிர் நீலம்
 
 
தனுசு
இன்று மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகள் வேண்டாமே. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கரு நீலம், பிஸ்தா பச்சை
 
மகரம்
நினைத்திருந்தபடி சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்
கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ஊதா
 
 
மீனம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ரோஸ்
 

வேட்பாளர் டெபாசிட் தொகை உய‌ர்வை ரத்து கோரி வழக்கு


ராமநாதபுரம் மாவட்டம், மாங்குன்றைச் சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் ஜி.முருகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நாடாளும‌‌ன்ற, ச‌ட்டம‌ன்ற பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய டெபாசிட் தொகை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. ச‌ட்டம‌ன்ற பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரூ.5 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் என்றால் ரூ.2,500ம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த சட்டத்தில் 2009ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்த தொகை முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்று உயர்த்தப்பட்டது. அதுபோல் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரு‌க்கான டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் என்றும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 என்றும் உயர்த்தப்பட்டுவிட்டது.

இது அடிப்படை உரிமையை மீறிய செயலாகும். உரிமையை மீறி நடத்தும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் இருக்காது. தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளவர்கூட டெபாசிட் தொகை உயர்வால் போட்டியிட தயங்குவார். இளைஞர்களை தேர்தலில் பங்கேற்க இந்த சட்டத் திருத்தம் தடையாக இருக்கும். எனவே இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும்வரை பழைய தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி பி.ஜோதிம‌ணி, இது தொட‌ர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய சட்டத்துறை, இந்திய தேர்தல் ஆணைய‌த்து‌க்கு தா‌க்‌‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

தி.மு.க., கூட்டணியில் சேர பா.ம.க., நிபந்தனை : 35 சீட் வேண்டும் என திட்டவட்டம்

"தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறும்' என, முதல்வர் கருணாநிதி, டில்லியில் நேற்று முன்தினம் அறிவித்ததும், நெய்வேலியில், "கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்தார். தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியில், குறைந்தது, 35 தொகுதிகள் வேண்டும் என, பேரம் பேசுவதற்காக, ராமதாஸ், "இரட்டை வேடம்' அரங்கேற்ற முடிவு செய்துள்ளார்.


"பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, நாங்களும் முடிவு செய்யவில்லை' என, டில்லியில், முதல்வர் கருணாநிதி நேற்று புதிய கருத்தை தெரிவித்திருப்பதால், இது வரை தி.மு.க., அணியில் இருந்த பா.ம.க., எந்த அணிக்கு தாவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., படுதோல்வியை தழுவியது. தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறிய பா.ம.க., மீண்டும் தி.மு.க., கூட்டணியில் இணைவதற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது.பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பது குறித்து. தி.மு.க., உயர் நிலை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்றும், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து, 2013ம் ஆண்டில் வரும் ராஜ்யசபா தேர்தலில், பா.ம.க.,வுக்கு இடம் தருவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.


இந்த அடிப்படையில், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது' என, முதல்வர் கருணாநிதி, டில்லியில் நேற்று முன்தினம் அறிவித்தார். உடனே, நெய்வேலியில் நடந்த பா.ம.க., இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ராமதாஸ், "கூட்டணி குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை' என, கருத்து தெரிவித்தார்.


ராமதாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டில்லியில் நேற்று, முதல்வர் கருணாநிதி, "பா.ம.க.,வை சேர்ப்பது குறித்து நாங்களும் இன்னும் முடிவு செய்யவில்லை' என, புதிய கருத்தை தெரிவித்தார். எனவே, தி.மு.க., அணியில் பா.ம.க., இடம் பெறுவதில், தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.


பா.ம.க.,வுக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் ராஜ்யசபா எம்.பி., பதவியை தன் மகன் அன்புமணிக்கு பெற முடியாத அதிருப்தி ராமதாசுக்கு இன்னமும் இருந்து வருகிறது. ராஜ்யசபா பதவிக்கு எந்த கட்சியையும் நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக, சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம், 35 முதல் 40 தொகுதிகளில் போட்டியிட்டு, ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்றும் அளவுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் கணிசமாக இடம் பெற வேண்டும் என்பது ராமதாசின் திட்டமாக உள்ளது.அதனால் தான், தி.மு.க., அணியில், கடந்த தேர்தலில், 31 தொகுதிகளை ஒதுக்கியது போல, தற்போதும், 31 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, பா.ம.க., விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், 21 முதல், 25 தொகுதிகள் பேரம் பேசப்படுவதால், அ.தி.மு.க.,விடம் பேரம் பேச ராமதாஸ் தயாராகியுள்ளார்.


கூட்டணி விவகாரத்தில் இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்து, பேரம் பேசி, அதிக சீட்டுகளை பெற முடியும் என ராமதாஸ் கருதுகிறார். பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதா, வேண்டாமா என்பது குறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் தி.மு.க., பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்ய முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.


பா.ம.க., கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கு அ.தி.மு.க., தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தே.மு.தி.க., முடிவுக்கு பின் பா.ம.க.,வை பற்றி யோசிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பா.ம.க., பொதுக்குழு கூடும் என தெரிகிறது. அக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்கா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: வெ‌ங்கையா நாயுடு எ‌ச்ச‌ரி‌க்கை

கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் வெ‌ங்கையா நாயுடு எ‌ச்‌ச‌ரி‌‌த்து‌ள்ளா‌‌‌ர்.

கவுகா‌த்‌தி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஆ‌ட்‌சி வ‌ந்தா‌ல் 100 நா‌ட்க‌ளி‌ல் அய‌ல்நா‌ட்டு வ‌ங்‌கிக‌ளி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய கரு‌ப்பு பண‌ம் ‌மீ‌ட்க‌ப்படு‌ம் என கா‌‌ங்‌‌‌கிர‌‌ஸ் க‌ட்‌‌சி உறு‌தி அ‌ளி‌த்‌திரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது கரு‌ப்பு பண‌த்தை ‌மீ‌ட்க ம‌த்‌திய அரசு தாம‌‌தி‌ப்பது ஏ‌ன் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

கரு‌ப்பு பண‌த்தை ‌விரை‌ந்து ‌மீ‌ட்க நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கரு‌ப்பு பண‌ம் பது‌க்‌கி வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பெய‌ர் ப‌ட்டியலை ம‌க்க‌ள் மு‌ன் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

நாடாளும‌ன்ற கூ‌ட்ட‌த் தொட‌ர் சுமூகமாக நடைபெறவே தா‌ங்க‌ள் ‌விரு‌ம்புவதாகவு‌ம், இரு‌ப்‌பினு‌ம் 2‌ஜி அலை‌க்க‌ற்றை ‌விவகார‌த்த‌ி‌ல் நா‌டாளு‌ம‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை நட‌த்த‌ப்பட வே‌ண்‌டு‌ம் எ‌ன்ற கரு‌த்த‌ி‌ல் இரு‌ந்து ‌பி‌ன்வ‌ா‌ங்க முடியாது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் ஒரு அ‌ங்க‌ம் போலவே ‌சி.‌பி.ஐ அமை‌ப்பு செய‌ல்படு‌கிறது எ‌ன்று‌ம் வெ‌ங்கையா நாயுடு கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

3ஆ‌ம் தேதி காஷ்மீர் செ‌ல்‌கிறா‌ர் ப.‌சித‌ம்பர‌ம்

புதுடெல்லி: 2 நாள் பயணமாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கா‌‌‌‌ஷ்‌மீ‌ர் செ‌‌ல்‌கிறா‌ர்.

வரு‌ம் 3ஆ‌ம் தேதி காஷ்மீர் செல்லு‌ம் அவ‌ர், மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசியல் நிலவரம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

மாநில பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த குழுவினர் மத்திய அரசுக்கு 3வது அறிக்கை கொடுத்துள்ளனர் எ‌ன்று‌ம் அதில் காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் ப‌.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய, மாநில அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று‌ம் சிதம்பரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பா.ம.க.வை சே‌ர்‌ப்பது ப‌ற்‌றி நாங்களும் முடிவு செய்யவில்லை: கருணாநிதி


தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சே‌ர்வது கு‌றி‌த்து பா.ம.க. இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ள‌தை தொட‌ர்‌ந்து இ‌வ்வாறு கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி, ி.ு.அணியிலசேருவதபற்றி ா.ம.க. முடிவசெய்யவில்லஎன்றால், ி.ு.க.வும்கூஅதுபற்றி இன்னுமமுடிவெடுக்கவில்லை. இதுபற்றி மேலுமஅவரஎதுவுமகூறவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வரும் 21ம் தேதி பார்லி கூடுகிறது : ரயில்வே பட்ஜெட் 25ல் தாக்கல்

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது. பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இக்கூட்டத்தொடர், ஏப்., 21 வரை நடக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


வரும் 21ம் தேதி, பார்லிமென்டின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.ரயில்வே பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை, இம்மாதம் 25ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிப்ரவரி 28ல், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.பொதுவாக, மே மாதம் முதல் வாரம் வரை லோக்சபாவின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி முடிவடையும் வகையில் தேதிகள் முடிவாகியுள்ளன.


இதற்கிடையே, கடந்த வருடம் லோக்சபாவில் பெரும் புயலை கிளப்பிய "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்து கொள்ள பா.ஜ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்ததால், கடந்த ஆண்டு லோக்சபாவின் குளிர்கால கூட்டத்தொடர், எந்தவிதமான விவாதங்களும் இன்றி முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வரும் 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இருப்பினும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்களது நிலையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகவே உள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதை விரும்புகிறது.


பா.ஜ., கருத்து: "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு இணங்காததால் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியது.பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவது குறித்து வரும் 8ம் தேதி, அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு முன், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டம் நாளை (இன்று) நடக்கும்.ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில், தாமஸ் மீதான பாமாயில் வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்பதை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இந்த பிரச்னை கோர்ட்டில் உள்ளது.எதிர்க்கட்சிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

முக நூல்

Popular Posts