சுவிஸ் வங்கிகளின் இரகசிய கணக்குகளில் பணத்தை போட்டு வைத்துள்ளவர்களின் விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கு முன்னர் அந்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவது நல்லது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நித்தின் கட்கரி கூறியுள்ளார்.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தின் கட்கரி, “சுவிஸ் வங்கி இரகசிய கணக்குகளில் பணம் போட்டுள்ளவர்கள் விவரங்களை எவ்வித தயக்கமும் இன்று உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்த விவரங்களையெல்லாம் விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் நிலையில் இதற்கு மேலும் அதனை மறைக்க முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லை” என்று கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கிகளின் இரகசிய கணக்குகளில் 21 இலட்சம் கோடி ரூபாய் பணம் போட்டப்பட்டுள்ளது என்கிற விவரம் வெளியாகிவிட்டது. இதற்கு மேலும் அந்த விவரங்களை மறைப்பது, ஆட்சியில் இருப்பவர்களின் நேர்மையின் மீது ஐயத்தை ஏற்படுத்திவிடும் என்று கட்கரி கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment