background img

புதிய வரவு

கருணைக்கிழங்கு கவாப்

தேவையானவை:


கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
ரொட்டித் துண்டு - 2
இஞ்சி, பூண்டு
மிளகாய்த்தூள், மிளகுத்தூள்
தனியாதூள், கரம் மசாலா
புதினா, உப்பு


செய்முறை:


கருணைக்கிழங்கை கொஞ்சம் புளி கலந்த நீரில் வேக வைத்துக்கொள்ளவும்.


ரொட்டித் துண்டுகளை நீரில் நனைத்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அரைத்த இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.


பின்னர், மிளகாய்த்தூள், ஜீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, கொஞ்சம் புதினா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.


வதக்கிய பின்னர் நன்கு ஆறவைத்து கருணைக்கிழங்கில் போட்டு பிசையவும்.


நன்கு பிசைந்த பின்னர், தேவையான அளவு நீளமாக உருட்டி முதலில் மைதாவிலும், பிறகு ரொட்டித் தூளிலும் பிரட்டி எண்ணெயில் பொரிக்கவும்.


அவ்வளவுதான் சுவையான கருணைக்கிழங்கு கவாப் தயார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts