ராஜஸ்தானில் கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் 15வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
குஜ்ஜார்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. டெல்லி, மும்பை செல்லும் ரயில் பாதைகளில் குடும்பத்துடன் குடியேறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 1,500 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே குஜ்ஜார்- அரசுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை 4வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று குஜ்ஜார் மக்கள் அறிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment