background img

புதிய வரவு

டெல்லி: வெங்காய வியாபாரிகள் போராட்டம் வாபஸ்

டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து வெங்காய வியாபாரிகள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர். 

ஆ‌சியா‌வி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய கா‌ய்க‌றி ச‌ந்தையான டெ‌ல்‌லி ஆசா‌த்பூ‌ரி‌ல் வருமான வ‌ரி‌த்துறை‌யின‌ர் 2 நா‌ட்களு‌க்கு மு‌ன்ன‌ர் ‌திடீ‌ர் சோதனை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இத‌ற்கு க‌ண்ட‌ன‌ம் தெ‌ரி‌வி‌த்து காலவரைய‌ற்ற கடையடை‌ப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுபட போவதாக வெ‌ங்காய ‌வியாப‌ா‌ரிக‌ள் அ‌றி‌வி‌த்‌தனர்.

இதனையடுத்து கடையடை‌ப்பு செ‌ய்யு‌ம் வெ‌ங்காய ‌வியாபா‌ரிக‌ள் ‌‌‌மீது 'எ‌‌ஸ்மா' ச‌ட்ட‌ம் பாயு‌ம் எ‌ன்று டெ‌ல்‌லி முதலமை‌ச்ச‌ர் ‌ஷ‌ீலா ‌‌தீ‌ட்‌‌சி‌த் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தார்.

இந்தநிலையில் முதலமைச்சர் ஷிலா தீட்சித்துடன் வெங்காய வியாபாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 

இதையடுத்து வெங்காய வியாபாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இத்தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஆசாத்பூர் காய்கறிகள் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் ராஜிந்தர் சவுத்ரி, தாங்கள் தெரிவித்த குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஷீலா தீட்சித் உறுதியளித்ததாக கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts