background img

புதிய வரவு

நடிகை வனிதாவுக்கு ஐகோர்ட் கண்டனம்

நடிகை வனிதா, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந் தாமன் ஆகியோர் ‘குழந்தை விஜய் ஸ்ரீஹரியை இரண்டு வாரத் துக்குள் நடிகை வனிதா­விடம் ஒப்படைக்க வேண்டும்’ என ஆகாஷுக்கு உத்தர விட்டனர். இந்நிலையில், ஆகாஷின் வக்கீல் இதய துல்லா, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பிதர்ம ராவ், அரிபரந்தாமன் ஆகியோர் முன்பு நேற்று ஆஜராகி, ‘குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற காலக் கெடு நாளை யுடன் முடி வடைகிறது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த கெடுவை மேலும் மூன்று வாரம் நீட்டிக்க வேண்டும்’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், வனிதா தரப்பின் கருத்தை கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி வழக்கை பிற் பகலுக்கு தள்ளி வைத் தனர். அதன்படி அதே நீதிபதிகள் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வனிதா நேரில் ஆஜராகி, “காலக் கெடுவை நீடிக்க கூடாது” என்றார். இதை கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு ஏன் சென்னை விமான நிலையம் போனீர்கள்? இது நீதிமன்ற அவமதிப்பு செயல் இல்லையா? தாத்தாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கியதால், அவன் கதறி அழுத காட்சியை டிவியில் பார்த்தோம். குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? யோசிக்க வேண்டாமா? கோர்ட் உத்தரவின் காலக்கெடு முடியும் வரை காத்திருக்க வேண்டாமா? நீங்கள் கூறுவது ஏற்க முடியாது. நாங்கள் விதித்த காலக்கெடுவை மேலும் 2 வாரத்துக்கு நீடிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts