background img

புதிய வரவு

அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.200 கோடி கடன்: புகாருக்கு மந்திரி நேரு பதில்

ஆத்தூர் : ""அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகங்களில் 200 கோடி ரூபாய் கடன் வைத்து சென்றனர். தற்போது, "டீசல்' தட்டுப்பாடு இல்லை. யாரோ எழுதி கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது, தினம் ஒரு போராட்டம் நடத்துவதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாடிக்கையாக கொண்டுள்ளார்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பேசினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போக்குவரத்து துறை அமைச்சர் நேரு ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பேசியதாவது: தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளில் 82.21 லட்சம் போக்குவரத்து வாகனங்களும், 49 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அல்லாத வாகனங்கள் 1.30 கோடி உள்ளன. ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, போக்குவரத்து கழகங்களுக்கு 200 கோடி ரூபாய் கடன் வைத்து சென்றார். யாரோ எழுதி கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது, தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியின் போது 16 ஆயிரத்து 392 பஸ்கள் இயக்கப்பட்டதில், 70 லட்சம் பேர் பயணம் செய்தனர். தற்போது தி.மு.க., ஆட்சியில் 20 ஆயிரத்து 733 பஸ்களும், 2.09 கோடி பயணிகளும் நாள்தோறும் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்து கழகங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு நேரு பேசினார்.

வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: கடந்த 1969ல் தனியார் பஸ் உரிமையாளர்களுடன், முதல்வராக இருந்த கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து 1974ல் தனியார் பஸ்கள் அரசுடமையாக்கப்பட்டது. கிராமம், நகர் பகுதிகளுக்கு முழுமையாக போக்குவரத்து வசதிகள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச, "பஸ் பாஸ்' திட்டம் என்றும் தொடரும். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு பொது நிதி வழங்கி வருகிறது. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts