சென்னை: சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம்தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கிந்திய கப்பற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வரும் 15, 16ம் தேதிகளில் வர உள்ளது.
அப்போது, கடலோர காவல் பணியில் கடற்படையின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வரும் 15ம்தேதி இங்கு வரும் கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பள்ளி, கல்லூரி நிறுவனத்தினர் ஐஎன்எஸ் அடையாறு, கப்பல் தளம், ராஜாஜி சாலை (நேப்பியர் பாலம் அருகில்) சென்னை-09 என்ற முகவரியை வரும் 11ம்தேதிக்குள் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு 25394240 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
0 comments :
Post a Comment