background img

புதிய வரவு

அ.தி.மு.க.வு‌க்கு ‌பிரசார‌மா? இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் ‌விஜ‌ய்


''அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார‌ம் செ‌ய்வது கு‌றி‌த்து இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை'' எ‌ன்று நடிக‌ர் ‌‌‌விஜ‌ய் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை‌யில் நடந்த 'வேலாயுதம்' படப்பிடிப்பில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், ஜெயலலிதாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சந்தித்தோம். இதற்கு முன்பு ராகுல்காந்தியை நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது எ‌ன்றா‌ர்.

அரசியலில் ஈடுபடுபடுவத‌ற்கு இது சரியான நேரம் அல்ல எ‌ன்று கூ‌‌றிய ‌விஜ‌ய், ஒரு நடிகரான என‌க்கு மக்க‌ளிட‌ம் இரு‌ந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எ‌ன்றா‌ர்.

'காவலன்' படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டா‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை எ‌ன்றா‌ர்.

ஆ‌ண்டு‌க்கு ஒரு சண்டை படத்திலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க திட்டமிட்டிரு‌ந்தாக ‌விஜ‌ய் கூ‌றினா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts