background img

புதிய வரவு

ராமே‌‌‌ஸ்வர‌‌ம் மீனவர்க‌ள் ‌மீது இலங்கை கடற்படை ‌மீ‌‌ண்டு‌ம் தா‌க்குத‌ல்

ராமே‌ஸ்வரம் ‌மீனவ‌ர்க‌ள் ‌‌மீது இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் ‌மீ‌ண்டு‌ம் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதோடு மீன்களையு‌ம் கொ‌ள்ளையடி‌த்து செ‌‌‌ன்று‌ள்ளன‌ர்.

கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி ராமே‌ஸ்வரத்தில் இருந்து 400 விசைப் படகுக‌ளி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன‌ர்.

இந்தியா, இலங்கை கடல் எல்லையான க‌ச்ச‌த்‌தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமே‌ஸ்வரம் மீனவர்களை தா‌க்‌கியதோடு து‌ப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டி அடி‌த்து‌ள்ளன‌ர்.

தங்கச்சிமடம் செல்வம், ரமேஷ் ஆகியோருக்குச் சொந்தமான விசைப் படகுகளைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த விலை உயர்ந்த இறால் மீன்களை கொ‌ள்ளை அடி‌த்து செ‌ன்றன‌ர்.

பின்னர் மீனவர்களிடம் இனிமேல் இந்தப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்து‌ள்ளன‌ர். இதனால் பலத்த நஷ்டத்துடன் கரையை நோக்கித் திரும்பியதாக மீனவர்கள் வேதனையுடன் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts