background img

புதிய வரவு

எப்போதும் அழுமூஞ்சியா அழகு குறையும் ஆபத்து


ரோம்: கண்ணீர் விட்டு அழும் சென்டிமென்ட் பெண்ணா நீங்க... உங்க கணவர் அல்லது காதலர் விலகி செல்வதுடன் முகத்தின் அழகும் குறைந்து போகலாம் என்று எச்சரிக்கிறது இஸ்ரேல் நாட்டில் நடந்த ஆய்வு முடிவு.

பெண்ணின் கண்ணீருக்கு அதிக சக்தி இருப்பதாக புராணங்களில் படித்திருக்கிறோம். ஆனால், இப்போது நிலவரம் எப்படி என்று அறிய இஸ்ரேலின் வெய்ஸ்மான் அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வில் இறங்கினர். ஆண்கள், பெண்கள் 60 பேர் இதற்கு சம்மதித்தனர். பெண்களில் 6 பேரை ஒரு குழுவாக பிரித்தனர். அவர்களை வடிவேலு பாணியில் கதறிக் கதறி அழக்கூடிய அழுகை படங்களை பார்க்க வைத்தனர். அப்போது பெண்கள் வடித்த கண்ணீரை சோதனைக் குழாயில் சேகரித்தனர். இன்னொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர். உண்மையான கண்ணீரை சில பெண்களின் முகத்திலும், உப்பு நீரை மற்ற பெண்கள் முகத்திலும் அப்ளை செய்தனர். யாருக்கு கண்ணீர், யாருக்கு உப்பு நீர் என தெரியாத நிலையில், ஆண்கள் சிலரை பெண்கள் அருகே வரவழைத்தனர்.

முகத்தருகே நின்று பேசச் செய்து விட்டு, ஆண்களை அழைத்துச் சென்று அவர்களது Ôடெஸ்ட்ரோட்ரான்’ (ரொமான்சுக்கு அவசியமான சுரப்பி) அளவை சோதித்தனர். உண்மையான கண்ணீரை முகர்ந்த ஆண்களுக்கு டெஸ்ட்டோட்ரான் சரிந்து கிடந்தது. உப்பு நீரை முகர்ந்தவர்களுக்கு அந்த மூடில் எந்த பாதிப்பும் இல்லை.

இதனால் ஒரு முடிவுக்கு வந்த ஆராய்ச்சியாளர்கள், தாரை தாரையாக கண்ணீர் விடும் பெண்ணால் ஆணின் தாம்பத்ய ஆசை குறையும் என்று அறிவித்துள்ளனர். அத்துடன், முகத்தில் கண்ணீர், உப்பு நீருடன் இருந்த பெண்களை போட்டோ எடுத்து ஆராய்ந்ததில் கண்ணீர் விட்ட பெண்களின் அழகு குறைந்திருந்ததாகவும் கூறினர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்ஒருவர் கூறுகையில், ‘‘மேற்கத்திய கலாசாரத்தில் அழும் பெண்ணின் முகத்தருகே கணவரோ, காதலரோ சென்று கட்டியணைத்து ஆறுதல் செய்வது சகஜம். அப்போது கண்ணீரில் இருந்து வெளியாகும் ரசாயனத்தால் ஆணின் டெஸ்ட்ரோட்ரான் மளமளவென மறைந்து விடும். அதேநேரம், இதில் பெண்ணுக்கு ஒரு நன்மையும் இருக்கிறது. பெண்ணின் கண்ணீரால் ஆணின் தாம்பத்ய மூடு குறைவதால் பலாத்கார வன்முறைகள் குறையலாம்’’ என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts