background img

புதிய வரவு

காம்பீர் ரூ. 11 கோடிக்கு ஏலம்; விலை போகாத கங்குலி; ஐ.பி.எல்., வீரர்கள் விலை விவரம்

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். கவுதம்காம்பீரை கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இது வரை முடிந்த ஏலத்தில் கவுதம்காம்பீர் அதிக விலைக்கு போய் முதலிடத்தில் உள்ளார். கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெய்ல், லாரா, கிப்ஸ் , ரைடர் ஆகியோரைஎந்த அணி உரிமையாளரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.
இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.
வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு:


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ஆர் ஆஸ்வின் 850,000 அமெரிக்க டாலர்
எஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டாலர்
டோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டாலர்
மைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டாலர்
ட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டாலர்
விரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டாலர்


டெக்கான் சார்ஜர்ஸ்


டேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்
கேமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
குமார் சங்ககாரா 700,000 அமெரிக்க டாலர்
கெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டாலர்
ப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டாலர்
இஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டாலர்
அமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டாலர்
ஜே பி டூமினி 300,000 அமெரிக்க டாலர்
ஷிகார்தவான் 300,000 அமெரிக்க டாலர்


டில்லி டேர்டெவில்ஸ்


இர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டாலர்
டேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டாலர்
மொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டாலர்
ஆரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டாலர்
நாமன் ஓஜா 270,000 அமெரிக்க டாலர்


கிங்ஸ் லெவன் பஞ்சாப்


டேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டாலர்
தினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டாலர்
பியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டாலர்
அபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டாலர்
பீரவீன் குமார் 800,000 அமெரிக்க டாலர்
ஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டாலர்
ரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டாலர்


கொச்சி


மகிலா ஜெயவர்த்தனா 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்
முத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டாலர்
ஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டாலர்
ஆர் பி சிங் 500,000 அமெரிக்க டாலர்
ப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டாலர்
பிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டாலர்
வி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டாலர்
பார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டாலர்
ஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டாலர்
ரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டாலர்


கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கவுதம் காம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்
யுசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
காலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
மனோஜ் திவாரி 475,000அமெரிக்க டாலர்
ஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டாலர்
பிரட் லீ 400,000 அமெரிக்க டாலர்
யோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டாலர்
பிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டாலர்


மும்பை இந்தியன்ஸ்


ரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டாலர்
டேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டாலர்


புனே வாரியர்ஸ்


ராபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
யுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆங்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டாலர்
ஆசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டாலர்
கிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டாலர்
காலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டாலர்
டிம் பெயின் 270,000 அமெரிக்க டாலர்
நாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டாலர்


ராஜஸ்தான் ராயல்ஸ்


ரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டாலர்
ராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டாலர்
பால் காலிங்வுட் 250,000 அமெரிக்க டாலர்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


சவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்
ஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜாகிர் கான் 900,000 அமெரிக்க டாலர்
புஜாரா 700,000அமெரிக்க டாலர்
திர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டாலர்
தில்ஷான் 650,000அமெரிக்க டாலர்
டேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டாலர்


காம்பீர் சாதனை : இன்றைய ஏலத்தில் கவுதம் காம்பீர் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.


விலைபோகாதவர்கள் : தமிம் இக்பால், சமாரா கபுகேடேரா, முரளி கார்த்திக், அஜந்தா மெண்டிஸ், கிரெம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தில்காரா பெர்ணாண்டோ, லுக் ரைட், மேட் ப்ரையர், மார்க் பவுச்சர், கிரேம் மனோ, பிரையன் லாரா, கிப்ஸ், ஜெசி ரைடர், சவுரவ் கங்கூலி மற்றும் கிறிஸ் கெயில்


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப்., 8 ல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.


வீரர்கள் தக்கவைப்பு :சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.


கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts