ஆஸ்திரேலியா டி20: கேப்டனாக கேமரூன் ஒயிட் நியமனம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் டுவென்டி 20 கேப்டனாக ஆல்ரவுண்டர் கேமரூன் ஒயிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றதால் மைக்கேல் கிளார்க் அப்பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ஒயிட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20-20 போட்டி ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. 2-வது போட்டி ஜனவரி 14-ம் தேதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் துணை கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment