10ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை: கிருஷ்ணகிரியில் வருகிற 10ம் தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி சர்வதேச ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்காததைக் கண்டித்தும், கிருஷ்ணகிரியில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
0 comments :
Post a Comment