சென்னை : தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியையும் , மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியையும் அழகிரி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா, கனிமொழி , தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரால் தி.மு.க., வுக்கு அவப்பெயர் ஏற்பட்டும் அவர்கள் மீது கட்சி தலைமை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் அமைச்சர் அழகிரி சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் எதிரொலியாக சென்னையிலேயே இருந்த போதும் தமிழகம் வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்க செல்லவில்லை. மேலும் நேற்று மாலை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகார தொடர்பால் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது, இவ்விவகாரத்தில் அடிபடும் ராஜா, கனிமொழி, பூங்கோதை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அழகிரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment