17 வது நாளாக நீடித்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக குஜ்ஜார்களுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவர்கள் மேற்கொண்டுள்ள ரயில் மறியல் போராட்டம் 17வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ராஜஸ்தான் மாநில மின்துறை அமைச்சர் ஜித்தேந்திர குமார் தலைமையிலான மூவர் குழுவினர் குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா தலைமையிலான 51 பேர் கொண்டு குழுவினருடன் ஜெய்ப்பூரில் 4வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடபடாவிட்டால் 12ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று குஜ்ஜார் இன மக்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஜ்ஜார்களின் போராட்டத்தால் ஜெய்ப்பூர்- மும்பை, ஜெய்ப்பூர்- டெல்லி மார்க்கத்தில் இரயில் சேவை கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment