background img

புதிய வரவு

பா.ஜ.க. யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது! சுஷ்மா, ஜெயிட்லி கைது

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் உள்ள லால் சவுக்கில் குடியரசுத் தினத்தன்று தேசக் கொடியேற்றச் சென்ற பாரதிய ஜனதா கட்சியினரின் ஏக்தா யாத்ரா, அம்மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. யாத்ராவிற்கு தலைமையேற்ற சுஷ்மா சுவராஜ், அருண் ஜெயிட்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

லால் சவுக்கில் கொடியேற்ற ஜம்மு- காஷ்மீருக்குள் சென்ற பாரதிய ஜனதா தலைவர்களை அம்மாநில அரசு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைத்தது. ஆனால் அவர்கள் இன்று மீண்டும் தங்கள் யாத்ராவை தொடங்கி, அம்மாநிலத்திற்குள் நுழைய முற்பட்டபோது, லக்கான்பூரில் கைது செய்யப்பட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜெயிட்லி, முன்னாள் அமைச்சர் அனந்த் குமார், அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அனுராக் தாக்கூர் ஆகியோர் லக்கான்பூரில் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் கைது செய்யப்பட்டதை ‘வரலாற்றுத் தவறு’ என்று கூறிய சுஷ்மா சுவராஜ், “தேசக் கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதனை ஏந்திச் செல்பவர்கள் கைது செய்யப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts