background img

புதிய வரவு

தயா‌நி‌தி மாற‌ன் ரா‌ஜினாமா செ‌ய்ய வ‌ே‌ண்டு‌ம்: கிரு‌‌‌ஷ்ணாசா‌மி வ‌லியுறு‌‌த்‌த‌ல்

'‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் முறைகே‌டு தொட‌ர்பாக 2004 முத‌ல் 2007 வரை இ‌ந்த துறை‌க்கு அமை‌ச்சராக இரு‌ந்த தயா‌நி‌தி மாற‌ன் ‌மீது‌ம் கு‌ற்ற‌ச்சா‌ற்று வெ‌ளிவர ஆர‌ம்‌பி‌த்து‌ள்ளதா‌ல் உடனடியாக அவ‌ர் தமது பத‌வியை ர‌‌‌ா‌ஜினாமா செ‌ய்ய வே‌ண்டு‌ம்'' எ‌ன்று பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் ‌கிரு‌‌ஷ்ணசா‌மி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், அ‌ண்மை‌யி‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் பெ‌ய்த கனமழை‌யி‌ன் காரணமாக ‌விவசா‌யிக‌ள் பெரு‌ம் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளா‌யின‌ர். ‌விவசா‌யிகளு‌க்கு உடனடியாக உத‌விக‌ள் செ‌ய்யாம‌ல் முதலம‌ை‌ச்ச‌ர் கால‌ம் கட‌ந்து ஹெ‌க்டேரு‌க்கு ப‌த்தா‌யிர‌ம் ரூபா‌ய் என அ‌றி‌வி‌த்து இரு‌க்‌கிறா‌ர். இது ஒரு ஏ‌க்கரு‌க்கு நாலா‌யிர‌‌ம் ரூபா‌ய் ஆகு‌ம்.

ந‌ஞ்சை ப‌யிரு‌க்கு ரூபா‌ய் ஏழா‌யிர‌ம் முத‌ல் ப‌த்தா‌‌யிர‌ம் வரை செலவு ஏ‌ற்படு‌கிறது. இதனா‌ல் முதலமை‌ச்ச‌ர் அ‌றி‌வி‌த்த தொகை போதுமானது அ‌ல்ல. இருபது ஆ‌யிர‌ம் வழ‌ங்‌கினா‌ல்தா‌ன் ‌விவசா‌யிகளால் மறு சாகுபடி செ‌ய்ய முடியு‌ம்.

மேலு‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் பெருவா‌‌‌ரியான ‌நில‌‌ங்க‌ள் உ‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம் இ‌ல்லை, கு‌த்தகைதார‌ரிட‌ம்தா‌ன் உ‌ள்ளது. ‌‌விவசா‌யிகளு‌க்கு ‌நிவாரண‌ம் வழ‌ங்கு‌ம் போது ‌கிராம ‌நி‌ர்வாக அலுவல‌ர்க‌ள் மூலமாக கண‌க்கெடு‌த்து உ‌ரிய பயனா‌ளிகளு‌க்கு ‌நிவாரண‌ம் செ‌ல்லுமாறு க‌ண்கா‌ணி‌க்‌க‌ப்பட வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இ‌திலு‌ம் ‌மிக‌ப்பெ‌‌ரிய ஊழ‌ல் நட‌ந்ததாக கருத‌ப்படு‌ம்.

கட‌ந்த 2006ஆ‌ம் ஆ‌ண்டு ச‌‌ட்டம‌ன்ற தே‌ர்த‌லி‌‌ன் போது 2 ஏ‌க்க‌ர் ‌‌விவசாய ‌நில‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌பிரசார‌ம் செ‌ய்து ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த நா‌ன்கரை ஆ‌ண்டு கால‌ம் ஆ‌கியு‌ம் பெருவா‌ரியான ம‌க்களு‌க்கு ‌நில‌ங்க‌ள் வழ‌ங்க‌‌ப்பட‌வி‌‌ல்லை. அ‌ப்படியே வழ‌ங்‌க‌ப்ப‌ட்ட ‌நில‌ங்க‌ள் கூட ஆளு‌ங்க‌‌ட்‌சி‌யினரா‌ல் வள‌ை‌த்து‌ப் போட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌தி.மு.க.‌வினரா‌ல் முட‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலமோசடி கு‌றி‌த்து த‌மிழக அரசு‌ ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம்.

ஸ்பெ‌க்‌ட்ர‌ம் முறைகே‌ட்டி‌ல் ஆ.ராசா ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று வ‌ந்தபோது ‌தி.மு.க. தலைவ‌ரி‌ன் அ‌றிவுறு‌த்த‌லி‌ன் பே‌ரி‌ல் நாடாளும‌ன்ற‌ம் சுமூகமாக நடைபெறவு‌ம், நா‌ட்டி‌ல் ஜனநாய‌க‌த்தை கா‌க்கவு‌ம் ம‌த்‌திய அமை‌ச்சராக இரு‌ந்த ஆ.ராசா பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ததாக அ‌றி‌வி‌த்தா‌ர். த‌ற்போது 2001ஆ‌ம் ஆ‌ண்டி‌லி‌ரு‌ந்து ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் முறைகேடு கு‌றி‌த்து ‌விசா‌‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.

இத‌ற்கு அ‌ப்போது அ‌ந்த துறை‌க்கு அமை‌ச்சராக இரு‌ந்த பா.ஜ.க.வை சே‌ர்‌‌ந்த அரு‌ண் சோ‌ரி தானே மு‌ன்வ‌ந்து ‌விசாரணை‌க்கு தயா‌ர் எ‌ன்று அ‌றி‌வி‌த்தா‌ர். த‌ற்போது 2004 முத‌ல் 2007 வரை இ‌ந்த துறை‌க்கு அமை‌ச்சராக இரு‌ந்த தயா‌நி‌தி மாற‌ன் ‌மீது‌ம் கு‌ற்ற‌ச்சா‌ற்று வெ‌ளிவர ஆர‌ம்‌பி‌த்து‌ள்ளது.

எனவே ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் முறைகே‌ட்டி‌ல் ராசா ரா‌ஜினாமா செ‌ய்தது போல தயா‌நி‌தி மாறனு‌ம் தனது பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ய ‌தி.மு.க.‌வி‌ன் தலைவ‌ர் அ‌றிவுறு‌த்த வே‌ண்டு‌ம். இ‌‌ல்லை எ‌ன்றா‌ல் ராசா த‌லி‌த் எ‌ன்பத‌ற்காக ப‌லி கொடு‌த்து‌வி‌ட்டா‌ர்க‌ள் என ம‌க்க‌ள் எ‌ண்ண‌த் துவ‌ங்குவா‌ர்க‌ள். தயா‌நி‌தி மாற‌ன் ரா‌ஜினாமா செ‌ய்‌ய‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் ஒரு க‌ண்‌ணி‌ல் சு‌ண்ணா‌ம்பு‌‌ம் ம‌ற்றொரு க‌ண்‌‌ணி‌ல் வெ‌‌ண்ணையு‌ம் வை‌த்தது போ‌ல் ஆ‌‌கி‌விடு‌ம். இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ற்று எழாம‌ல் இரு‌க்க தயா‌நி‌தி மாற‌ன் தனது பத‌வியை ரா‌ஜினாமா ச‌ெ‌ய்ய வே‌ண்டு‌ம்.

2011ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்டம‌ன்ற தே‌ர்‌‌த‌ல் நே‌ர்மையாக நடைபெற ‌த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ளுட‌ன் இ‌ந்‌திய தே‌ர்த‌்‌ல் ஆணைய‌‌ர்க‌ள் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஆலோசனை நட‌த்‌தின‌ர். ஆனா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ஆளு‌ம் க‌ட்‌சி‌யின‌ர் தே‌‌ர்த‌ல் வேலை துவ‌ங்‌கி‌வி‌ட்டதாக அ‌றி‌வி‌த்து ஒ‌வ்வொரு ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌யிலு‌ம் 300 குழு‌க்க‌ள் அமை‌த்து ஒ‌வ்வொரு வா‌க்காள‌ரு‌க்கு‌ம் 300 ரூபா‌ய் வழ‌ங்‌கி‌வி‌ட்டதாகவு‌ம், தே‌ர்தலு‌க்காக 20,000 கோடி செலவ‌ளி‌க்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் தகவ‌ல்‌க‌ள் வெ‌ளிவர துவ‌ங்‌கி உ‌ள்ளன.

இதை தடுத‌்து ‌நிறு‌த்த தே‌ர்த‌ல் ஆணைய‌ம் உடனடியாக செய‌லி‌ல் இற‌ங்க வே‌ண்டும‌். இ‌ல்லை எ‌ன்றா‌‌ல் 2011 ச‌ட்டம‌ன்ற தே‌ர்த‌ல் ‌ஸ்பெ‌க்‌ட்ரமாக கருத‌ப்படு‌ம். இது கு‌றி‌த்து டெ‌ல்‌லி செ‌ன்று இ‌ந்‌திய தே‌ர்த‌ல் ஆணைய‌ரிட‌ம் புகா‌ர் அ‌ளி‌க்க இரு‌க்‌கிறே‌ன் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts