கடந்த 2005 மற்றும் 2006&ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இராம.நாராயணன் கூறியிருக்கிறார்.
0 comments :
Post a Comment