செஞ்சுரியன்; ""தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டி, அசத்தலான சதம் விளாசிய, இந்தியாவின் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம்,'' என்கிறார் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளர் வான் ஜில்.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. செஞ்சுரியனில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் என, இந்தியா தடுமாறிய நிலையில் எழுச்சி கண்ட யூசுப் பதான், அதிரடியாக சதம் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். இதுகுறித்து தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் வான் ஜில் கூறியது:
இந்தியாவுக்கு எதிரான தொடரில், "பவுன்சர்கள்' முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைத்தோம். டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் இதை அருமையாக சமாளித்தனர். ஆனால் ஒருநாள் தொடரில் சொதப்பினர். இதனால் தான் மார்கல், டிசோட்சபே இருவரும் இந்திய அணியின் "டாப் ஆர்டரை' தகர்த்து, அதிக விக்கெட் வீழ்த்த முடிந்தது.
துணிச்சல் போராட்டம்:
இந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து அதிக பாடம் கற்றுள்ளோம். நாங்கள் செய்த தவறுகளால் 1-2 என பின்தங்கி, பிறகு தொடரை வென்றோம். இந்தியா டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் உள்ள அணி. இந்நிலையில் அவர்களிடம் இருந்து, அதிக போராட்டத்தை நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்பது மிகவும் கேலிக்கூத்தானது.
இதை ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தோம். ஆனால், எதிர்பார்ப்பை விட சற்று கூடுதலாகவே, போராட்டம் இருந்தது. இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து, கடைசி வரை துணிச்சலாக போராடினர். இருப்பினும் தொடரை வென்றது, உலக கோப்பை தொடரை உற்சாகமாக துவக்க உதவும்.
கட்டுப்படுத்த முடியாது:
இந்தியாவின் யூசுப் பதான் அதிரடியான வீரர். செஞ்சுரியன் போட்டியில் இவரும், ஜாகிர் கானும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரது சில "ஷாட்டுகள்' நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தோல்வி உறுதியாகி இருந்தது. ஆனால் யூசுப் பதான் போட்டியை எங்களிடம் இருந்து கொண்டு செல்ல இருந்தார். நல்லவேளையாக மார்கல் கைகொடுத்தார். உலக கோப்பை தொடரில் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம்.
மாறும் ஆடுகளங்கள்:
உலக கோப்பை வெல்லும் அணிகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான். ஏனெனில், சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது என்பது கடினமான காரியம். இரண்டாவதாக இலங்கையை குறிப்பிடலாம். அடுத்து, சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியும் போட்டியில் உள்ளது. இந்தியாவில் ஆடுகளங்கள் நிலையில்லாத தன்மை கொண்டவை. ஒருநாள் போட்டிகளின் போது, திடீரென மாறும் இயல்புள்ளது. அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதைப் பொறுத்து, உலக கோப்பை தொடரின் வெற்றி அமையும்.
இவ்வாறு வான் ஜில் கூறினார்.

0 comments :
Post a Comment