background img

புதிய வரவு

காமன்வெல்த் ஒப்பந்த பிரச்னை: 10 நாளில் தீர்வு: மத்திய அமைச்சர் உறுதி


புதுடில்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஒப்பந்தங்கள் பெற்ற, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பாக்கி தொகை செலுத்த வேண்டியுள்ளது. இவை வழக்கு தொடுக்க முடிவு செய்திருப்பதால் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மேகன் உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் கடந்த ஆண்டு(அக்., 3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இப்போட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 70 ஆயிரம் கோடி நிதியில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தற்போது, இப்போட்டிக்கான ஒப்பந்தக்காரர்களுக்கு முழுத் தொகை செலுத்தப்படாதது தெரிய வந்துள்ளது. துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் பெற்ற ரிச் பர்ச் ஸ்பெக்டக், வாணவேடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்த ஹாவர்டு சன்ஸ் உள்ளிட்ட நான்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களுக்கான தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளன. பாக்கி தொகையை வசூலிக்க வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாக்கி தொகை வழங்குவது பற்றி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""போட்டிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும், ஒப்பந்த தொகை வழங்கப்படவில்லை. இப்பிரச்னை இனியும் நீடிக்க விரும்பவில்லை. மிக விரைவில் தீர்வு காணப்படும். மத்திய விளையாட்டு செயலருடன் விவாதித்தேன். ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகளிடம் பாக்கி தொகை குறித்து ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன். 10 நாட்களுக்குள் பாக்கி தொகையை செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்,''என்றார்.
இது தொடர்பாக, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில்,""சில நிறுவனங்கள் முறைப்படி செயல்படவில்லை. எனவே, கடைசி கட்ட தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை கிடைத்த பின் பாக்கி தொகை வழங்கப்படும். பர்ச் நிறுவனத்துக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. ஹாவர்டு சன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. இதில், வரி தொடர்பான விளக்கம் தேவைப்பட்டதால் தான் பாக்கி தொகை நிறுத்தப்பட்டது,''என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts