காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்வதற்காக வரும் 30ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.
மே மாதம் நடைபெற உள்ள தமிழகசட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி வைத்தே போட்டியிடும் என்று உறுதியாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் 31ஆம் தேதி சந்தித்து பேசுகிறார்.
இந்த பேச்சு வார்த்தையின்போது கூட்டணி தொடர்பாகவும், தேர்தல் பணி தொடர்பாகவும் இருதரப்பினரும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையிலேயே ஓரளவுக்கு எல்லா முடிவுகளும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகிறார். மாநாடு முடிந்தவுடன், அன்று இரவே அவர் சென்னை திரும்புகிறார்.
3ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கருணாநிதிபொதுக்குழுவுடன் கலந்து ஆலோசித்து, வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிகிறது.

0 comments :
Post a Comment