புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் 60 பேர் விலகி உள்ளதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கடந்த 20ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகினார்.
மேலும் அவரது ஆதரவாளரான திருப்புவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளனும் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தட்டாஞ்சாவடி, இந்திராநகர், மணவெளி உள்பட பல தொகுதி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ளனர்.
இதற்கான விலகல் கடிதத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ரங்கசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments :
Post a Comment