WD |
சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்ஜெயக்குமார், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், பா.ம.க. உறுப்பினர்வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் மாரிமுத்து, இந்தியகம்யூனிஸ்டு உறுப்பினர் சிவ புண்ணியம், ம.தி.மு.க. உறுப்பினர் சதன்திருமலைகுமார், விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் இலங்கைகடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பனிடம் அனுமதி கேட்டனர்.
இதற்கு அவைத் தலைவர் ஆவுயடைப்பன் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை இதற்கு தீர்வுகாணப்படாதது கவலை அளிக்கிறது என்றனர்.
மத்திய-மாநில அரசுகள் எடுத்த முயற்சி எந்த பலனும் கிடைக்கவில்லை.இனியாவது ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.நேற்று தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது அந்த பகுதியில்பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலை கொடுக்க வேண்டும். இனி மீனவர்கள் மீது தாக்குதல்நடைபெறாமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன்,நாகை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த சின்னங்குடியைச் சேர்ந்த மீனவர்பாண்டியன் என்பவர் ஜெகதாப்பட்டினம் அருகே மீன் பிடிக்கச் சென்றிருந்தபோது, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டதால் உயிரிழந்திருக்கிறார்.
இதனால் அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய கொந்தளிப்புகுறித்து இந்த அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இங்கே தங்களுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த கருத்துக்களோடுஅரசின் சார்பில் எங்களுடைய உணர்வு நிச்சயமாக இருக்கிறது என்றுஇங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் என்றுநம்புகிறேன். ஆகவே அந்த வகையிலே அரசின் சார்பிலே ஒரு விளக்கத்தைஇங்கே எடுத்து வைக்க விரும்புகிறேன.12.1.2011 காலை 6 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம்மீன்பிடி தளத்திலிருந்து காரைக்கால்- கிளிஞ்சல் மேட்டைச் சேர்ந்தஆனந்தராஜ் என்பவருககு சொந்தமான விசைப்படகு ஒன்றில் பாண்டியன்உள்ளிட்ட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மாலை 5மணி அளவில் ஜெகதாப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 15 கடல் மைல்தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபேவாது ரோந்து வந்த இலங்கைகடற்படையினர் மீனவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் பாண்டியன் குண்டு காயம் அடைந்திருக்கிறார். உடன் இருந்தமீனவர்கள் காயம் அடைந்த பாண்டியனை கரைக்கு அழைத்து வந்துமணல்மேல்குடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றிருக்கிறார்கள். இதனையடுத்து மீனவர் சுமார் 100 பேர், பாண்டியனின்பிரேதத்தை ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலே வைத்துநடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள் நிகழ்விடம் சென்றுமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், இறந்து போனபாண்டியன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரண் தொகை இன்றையதினத்திற்குள் வழங்கப்படும் எனவும் மேலும் அவரது சகோதரி ஒருவருக்குஅரசு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், உறுதி அளித்ததின்பேரில் சாலைமறியலை கைவிட்டனர். தற்போது பாண்டியனின் உடல் அரசுமருத்துவமனையில் பரிசோதனைக்காக உள்ளது.பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தயாராகவைத்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காலையிலேயே தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு பேசப்பட்டிருக்கிறது. அங்கே எந்தவிதமானசட்ட-ஒழுங்கு பிரச்சனையும் இல்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர்கூறுகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துமுறையாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால்தாக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் நாம் தொடர்ந்து பலமுறைகோரிக்கை வைத்து, அவர்களும் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கூறியும்இப்படிப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தே வருகின்றன.
இந்த நிகழ்வு குறித்தும் மத்திய அரசுக்கு இன்றைய தினமே முதலமைச்சர்உடனடியாக இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக்கொண்டு தந்தி ஒன்றும் அனுப்பியிருக்கிறார் என்பதை நான் இந்தஅவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
0 comments :
Post a Comment