WD |
''புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச்சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள்மீன் பிடிக்கச் சென்ற பொழுது சிங்கள கடற்படை துப்பாக்கியால் சுட்டதில்பாண்டியன் என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.ஆனால் இது போன்ற தாக்குதலைக்கண்டிக்காதவர்கள்தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில்இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும்வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர.இதனைத் தட்டிக்கேட்ட என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச்சிறையில் தள்ளினார் கருணாநிதி. ஆனால் சுடப்படுவதற்குக் காரணமானராஜபக்சவுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பினை மத்திய அரசு அளித்தது.
தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்றுதமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்துநிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல்கொண்டாட முடியும்?
இதற்கு என்ன பதிலை முதலமைச்சர் வைத்திருக்கிறார்? ஒட்டு மொத்தஇனத்தையும் அழித்தொழித்த சிங்கள இராணுவத்திற்கு அனைத்துஉதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும்ஆயத்தமாகி வருகிறத,இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா? சிங்களரால் கொல்லப்பட்ட மீனவன்பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அதுஇந்திய ராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.
தமிழனுக்கு சிங்களர் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா.இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்சனையில் கருணாநிதிஇன்றும் கடிதம் எழுதி பிரச்சனையை மூடப் போகிறாரா?
முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் அளிக்கவேண்டும். இந்தப் பிரச்சனையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித்தீர்வாகத்தான் இருக்க வேண்டும்'' என்று சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார.
0 comments :
Post a Comment